Memes
oi-Vigneshkumar
சென்னை: காலிஃபிளவர் கடை விளம்பரம் தொடர்பான போஸ்டரை இணையத்தில் நெட்டிசன்கள் வைத்து செய்து வருகின்றனர்.
உலகிலேயே மிகவும் பழமையான மொழிகளில் ஒன்று தமிழ். உலக செம்மொழியாம் தமிழ் மொழியின் சொழுமை தொடர்ந்து உயர்ந்தே வருகிறது.
சனிக்கிழமைகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை?.. தமிழக அரசு பரிசீலனை
உலகெங்கும் உள்ள தமிழர்களால் பேசப்படும் தமிழ் மொழியின் சிறப்பை உணர்ந்து, தமிழர்களைத் தாண்டியும் பலரும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபட்டு வருகின்றனர்.

தமிழ்
மிகவும் அழகான மொழிகளில் ஒன்றாகத் தமிழ் இருந்து வருகிறது. அதேநேரம் தமிழ் மொழியில் ஒற்றை லெட்டரை மாற்றிப்போட்டாலு் கூட அதன் ஒட்டுமொத்த அர்த்தமே மாறி போகிவிடும். அதுபோன்ற ஒரு சம்பவம் தான் இணையத்தில் இப்போது வைரலாகி உள்ளது.

கன்பியூஸ் ஆன பெயிண்டர்
காலிஃபிளவர் மற்றும் சிக்கன் விற்கும் தள்ளு வண்டி கடை ஒன்றின் விளம்பர எழுத்துகள் தான் இப்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. காலிஃபிளவர் என்று எழுதுவதற்குப் பதிலாக அதில் காளி புலவர் என்று எழுதப்பட்டு உள்ளது. நெட்டிசன்கள்கள் இதை வைத்துச் செய்து வருகின்றனர்.

சந்திரமுகி
சந்திரமுகி திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியைப் பதிவிட்டு, ஒரு காலத்தில் காளி புலவர் என்று ஒருத்தர் இருந்ததாகவும் அவர் தள்ளு வண்டியில் நின்று பாடுனதாகவும் பேசிக் கொள்வதாகப் பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்!

அடுத்த அவதாரம்
காளி புலவர் என்று எழுதிய அந்த பெயிண்டரை தான் இணையத்தில் நெட்டிசன்கள் வைத்துச் செய்து வரும் நிலையில், இப்போது போஸ்டர் ஒன்று இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. இந்த பேனரில் காலி இடம் வாடகைக்கு என்பதற்குப் பதிலாகக் காளி இடம் வாடகைக்கு என்று உள்ளது. இந்த படத்தை இணையத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
English abstract
Tamil viral memes newest: (வைரல் தமிழ் மீம்ஸ்) Cauliflower boulevard supplier store memes.
Tale first printed: Monday, April 18, 2022, 22:22 [IST]