துருவங்கள் பதினாறு, கவலை வேண்டாம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை யாஷிகா ஆனந்த், தனது கிளாமரான நடிப்பால் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தவர். அதன்பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான யாஷிகா கடந்த சில தினங்களுக்கு முன்பாக மோசமான கார் விபத்து ஒன்றில் சிக்கினார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் யாஷிகாவின் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த ஜூலை 25ம் தேதி அதிகாலை ஒரு மணி அளவில் நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றிற்கு சென்றுவிட்டு புதுச்சேரியில் இருந்து காரில் சென்னை நோக்கி வந்துள்ளார். அப்போது அதிவேகாமாக வந்த யாஷிகாவின் கார் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சூளேறிக்காடு என்ற பகுதி அருகே கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகா ஆனந்தின் தோழியான ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் இன்ஜினியர் வள்ளி செட்டி பவணி விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் தற்போது சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இடுப்பு, முதுகு, வயிறு, கால் என பல இடங்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து யாஷிகா தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

என்னது ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ கைவிடப்பட்டதா?கடுப்பான இயக்குனர் செல்வராகவன்!
யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்யதுள்ளனர். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சுயநினைவிற்கு வந்த யாஷிகா ஆனந்த் தன்னுடைய தோழியான வள்ளி செட்டி பவணி மறைவு குறித்து உருக்கமாக பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதேபோல் விபத்தின் போது தான் குடிக்கவில்லை என்றும், தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். மேலும் படுக்கையிலேயே இயற்கை உபாதைகளை கழிப்பதாகவும், எழுந்து நடக்கவே 5 மாதமாகும் என்றும் தன்னுடைய உடல் நிலை குறித்தும் குறிப்பிட்டிருந்தார் யாஷிகா.

இந்நிலையில் தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் படுக்கையில் படுத்திருக்கும் யாஷிகா, வலது காலில் கட்டுப்போட்டு, தலையணை மேல் வைத்திருக்கிறார். படத்தை பார்க்கும் போது அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது தெரிய வருகிறது. அவரின் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் அவரின் நிலை கண்டு சீக்கிரமாக உடல்நலம் தேறி வர வேண்டும் என உருக்கமாக தெரிவித்து வருகின்றனர்.