சென்னை: அன்னையர் தினம் என்பதால் வாழ்த்துக்களோடு, அம்மா-பிள்ளைகள் பற்றிய ஜாலி மீம்ஸ்களும் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. “சொன்ன பேச்சைக் கேட்பதில்லை.. வீட்டு வேலைகளைச் செய்வதில்லை.. எப்போது பார்த்தாலும் போனை பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்..” இதுதான் பெரும்பாலும் எல்லாப் பிள்ளைகளும் வீட்டில் வாங்குகிற திட்டாக இருக்கும். அன்னையர் தினமான இன்று ஒருபுறம் வாழ்த்துக்களைப் பகிர்ந்து
