ஹைலைட்ஸ்:

  • பிக் பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்த அபிஷேக் ராஜா
  • கமலை விளாசிய அபிஷேக் ராஜா

பிக் பாஸ் 5 நிகழ்ச்சி நேற்று இரவு கோலாகலமாக துவங்கியது. பிக் பாஸ் 5 வீட்டில் இருக்கும் அபிஷேக் ராஜா பற்றிய ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில் அவர் கமலை விளாசியிருக்கிறார். வீடியோவில் அபிஷேக் கூறியிருப்பதாவது,
ஊருக்கே தெரியும்டா உங்களை கேமரா வச்சு எடுத்துக்கிட்டு இருக்காங்கனு. ஆனால் கிடைச்ச 100 நாள்ல நீ தமிழ்நாடு சி.எம். ஆகணும் என்பதற்காக பண்ற வேலைலாம் இருக்கு தெரியுமா?. முடியலடா என்னால, கேட்டால் பிக் பாஸுங்கிறீங்க என்றார்.

கமல் ஹாசன் பிக் பாஸ் வீட்டில் அரசியல் பேசுவது ஊருக்கே தெரியும். இந்நிலையில் அபிஷேக் ராஜா அவரையே திட்டிவிட்டு தற்போது பிக் பாஸ் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

அபிஷேக் பேசிய வீடியோவை கமலை டேக் செய்து இது என்னணு பாருங்க ஆண்டவரே என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஆள் எடுக்கும்போது அவர் அந்த நிகழ்ச்சியை கிழித்து தொங்கவிட்டதை பற்றி எல்லாம் தெரியாமலா இருக்கிறீர்கள் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை பார்வையாளர்கள் கேட்டுள்ளனர்.

யார் கண்டால், இந்த வீடியோ குறித்து கமலே அபிஷேக்கிடம் கேட்டாலும், கேட்பார் என்கிறார்கள் ரசிகர்கள்.

அப்பாடா, வேண்டுனது வீண் போகல: மகிழ்ச்சியில் பிக் பாஸ் 5 பார்வையாளர்கள்