ஹைலைட்ஸ்:

  • கே.எல். ராகுலை காதலிக்கும் நடிகை அதியா ஷெட்டி
  • மகளின் காதல் குறித்து பேசிய நடிகர் சுனில் ஷெட்டி

பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும், நடிகையுமான அதியா கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுலை காதலித்து வருகிறார் என்று பேசப்படுகிறது. இருவரும் சேர்ந்து வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள், ஒன்றாக நேரம் செலவிடுகிறார்கள், செல்ஃபி எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்கிறார்கள்.

ராகுலின் இன்ஸ்டா போஸ்ட்டை பார்த்து அதியா கமெண்ட் செய்கிறார். அதியா ஏதோவது போஸ்ட் போட்டால் ராகுல் கமெண்ட் செய்கிறார். ஆனால் காதலை மட்டும் இருவரும் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவில்லை. அதியா ஷெட்டியும், ராகுலும் காதலர்கள் தான், காதலை தவிர வேறு எதுவும் இல்லை என்று பாலிவுட்காரர்கள் சத்தியமே செய்கிறார்கள்.

இந்நிலையில் கே.எல். ராகுலுடன் சேர்ந்து இங்கிலாந்துக்கு சென்றிருக்கிறார் அதியா. தன் பார்ட்னர் என்று கூறி அதியாவை அழைத்துச் சென்றிருக்கிறார் ராகுல்.

இந்த காதல் குறித்து அதியாவின் தந்தையான சுனிலிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது,

என் மகள் இங்கிலாந்தில் தான் இருக்கிறார். அவர் தன் தம்பி அஹானுடன் சென்றிருக்கிறார். ஹாலிடேவுக்கு சென்றிருக்கிறார்கள். அதியாவும், ராகுலும் ஒரே நிறுவன விளம்பரத்தில் நடித்தது குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.

அவர்களை ஜோடியாக பார்க்க அருமையாக இருக்கிறது. அதனால் விளம்பர நோக்கில் அது ஒர்க்அவுட் ஆகியிருக்கும். அவர்களை சேர்த்து வைத்து பார்க்க நன்றாக இருக்கிறது. நான் விளம்பரத்தை சொன்னேன் என்றார்.

அஹான் மற்றும் ராகுல் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, My Love My Strength என குறிப்பிட்டிருந்தார் சுனில். இது குறித்து கேட்டதற்கு, எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்களில் ராகுலும் ஒருவர். என் மகனும், ராகுலும் நண்பர்கள் என்றார்.

சுனில் ஷெட்டி நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ் படம் தர்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

10 வயசு சின்னப் பையனை போய் எப்படி காதலிப்பது?: ரொம்ப யோசித்த நடிகை