மும்பை டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் நடந்த ஐபிஎல் 2022 தொடரின் 21வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீழ்த்தி குஜராத்துக்கு முதல் தோல்வியைப் பரிசாக அளித்தது. டி.நடராஜனின் அற்புத பவுலிங்கினால் குஜராத்தை 162/7 என்று மட்டுப்படுத்திய சன் ரைசர்ஸ் பிறகு கேன் வில்லியம்சன் (57) அபிஷேக் சர்மா (42), நிகலஸ் பூரன் (34) ஆகியோரின் தொழில் நேர்த்தியான விரட்டலில் 168/2 என்று 5 பந்துகள் மீதம் வைத்து வெற்றி கண்டது. இது சன் ரைசர்ஸ் அணியின் 2வது வெற்றியாகும்.
