தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் விஜய் தேவரகொண்டாலிகர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படம் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் உருவாகி வருகிறது. இந்தபபடத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகும் ‘லிகர்’ படத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் தற்போது ‘லிகர்’ படக்குழுவினர் அமெரிக்காவில் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். இந்த படப்பிடிப்பில் விஜய் தேவர்கொண்டா மற்றும் மைக்டைசன் மோதும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் மைக்டைசனுடன் விஜய் தேவர்கொண்டா எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மர்ம நபர்களால் தாக்கப்பட்ட இளம் நடிகை: படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!
உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் மைக் டைசனுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள விஜய் தேவர்கொண்டா அதில், ‘இந்த மனிதர் எவ்வளவு அன்பானவர், ஒவ்வொரு நொடியும் நான் அவருடன் இருக்கும் நினைவுகளை சேமித்து வைக்கிறேன். அவருடன் பணிபுரிவது மிகச்சிறந்த வாய்ப்பு என்று கருதுகிறேன் என்று பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.