ஹைலைட்ஸ்:

  • குஷ்புவின் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்த விஷமிகள்
  • குஷ்பு ஆதரவாளர்கள் அதிர்ச்சி

நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு சுந்தர் ட்விட்டரில் ஆக்டிவாக இருப்பவர். காலையில் ஒரு குட்மார்னிங் சொல்பவர் இரவு குட்நைட் சொல்லிவிட்டு தான் தூங்க செல்வார். நாட்டு நடப்புகள் குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து ட்வீட் செய்வார்.

மேலும் அடிக்கடி தன் செல்ஃபிக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிப்பார். தன் செல்ல மகள்கள், கணவர் சுந்தர் சி.யுடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களையும் வெளியிடுவார்.

இந்நிலையில் குஷ்புவின் ட்விட்டர் கணக்கு பக்கம் இன்று சென்றவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. யாரோ அவரின் கணக்கை ஹேக் செய்து புகைப்படத்தை மாற்றியுள்ளனர்.

khushbu

தற்போது குஷ்புவின் ட்விட்டர் கணக்கு (Briann) பிரையன் என்கிற பெயரில் இருக்கிறது. யார் அந்த பிரையன் என்று சமூக வலைதளவாசிகள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

முன்னதாக ட்விட்டர் கணக்கில் இருக்கும் டிக் அடிக்கடி மறைந்து வந்தது குறித்து புகார் தெரிவித்தார் குஷ்பு. இந்நிலையில் அவரின் ட்விட்டர் கணக்கே ஹேக் செய்யப்பட்டிருப்பது குஷ்புவின் ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

ஹேக் செய்த நபர் எதற்காக அனைத்து ட்வீட்டுகளையும் நீக்கினார் என்பதும் தெரியவில்லை என்கிறார்கள் ரசிகர்கள். ட்விட்டரில் குஷ்புவை 1.3 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பண்ணை வீட்டில் இரவில் ‘ஸ்பெஷல்’ பார்ட்டி: சூப்பர் ஹிட் பட நடிகை கைது