ஹைலைட்ஸ்:

  • குடும்ப புகைப்படங்களை வெளியிட்ட குஷ்பு
  • குஷ்புவை வாழ்த்தும் ஆதரவாளர்கள்
  • அண்ணாத்த படத்தில் நடித்திருக்கும் குஷ்பு

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பு பாஜகவில் சேர்ந்தார். கடந்த மாதம் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவரால் வெற்றி பெற முடியாமல் போய்விட்டது.

தோல்வி அடைந்தாலும் திமுக தலைவர் ஸ்டாலினை மனதார வாழ்த்தி ட்வீட் போட்டார். அதை பார்த்தவர்களோ, குஷ்பு மீண்டும் திமுகவில் சேர அடிபோடுகிறார் என்று கமெண்ட் அடித்தார்கள்.

என்னாது, குஷ்பு மறுபடியும் திமுகவில் சேரப் போகிறாரா?!இந்நிலையில் தன் மூத்த மகள் அவந்திகா இளைய மகள் அனந்திதாவுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தையும், கணவர் சுந்தர் சி., மகள்களுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் ட்விட்டரில் வெளியிட்டு என் உலகம் என தெரிவித்துள்ளார் குஷ்பு.
அந்த புகைப்படங்களை பார்த்த ஆதரவாளர்கள் கூறியிருப்பதாவது,

அக்காவுக்கு வாழ்த்துக்கள். இப்படி ஒரு நல்ல குடும்பம் அமைந்ததில் மகிழ்ச்சி. கொரோனா வைரஸ் பிரச்சனை காலத்தில் குடும்பத்துடன் உங்களை பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது.

மகள்கள் நன்றாக வளர்ந்துவிட்டனர். சின்ன மகள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிவிட்டாரே. சுந்தர் சி.யை பார்ப்பதில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளனர்.

குஷ்புவின் ட்வீட்டை பார்த்து சிலர் கிண்டலும் செய்திருக்கிறார்கள். தேர்தலில் அவர் தோல்வி அடைந்தது பற்றி கலாய்த்துள்ளனர்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சுந்தர் சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதும் நேராக கெஸ்ட் ஹவுஸுக்கு சென்று தன்னை ஒரு வாரம் தனிமைப்படுத்திக் கொண்டார். அதன் பிறகே வீட்டிற்கு வந்து மனைவி மற்றும் மகள்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கெரியரை பொறுத்தவரை சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் குஷ்பு. பல ஆண்டுகள் கழித்து அவர் ரஜினியுடன் சேர்ந்து நடித்திருக்கிறார்.

ரஜினி-குஷ்பு ஜோடி ராசியான ஜோடி என்று பெயர் வாங்கியது. இந்நிலையில் அவர்கள் மீண்டும் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். அண்ணாத்த படத்தில் மீனாவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.