மாளவிகா மோகனனின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த பிரேம்ஜி அமரன் வெளியிட்ட வீடியோ ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

மாளவிகா மோகனன்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் மாறன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து முடித்திருக்கிறார் மாளவிகா மோகனன். அவர் அவ்வப்போது தன் கவர்ச்சி மற்றும் படுகவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தன் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டார் மாளவிகா மோகனன்.

Twitter-malavika mohanan

பிரேம்ஜி அமரன்

மாளவிகா மோகனன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் ஒரு ஜிஃப் வீடியோவை கமெண்ட் பகுதியில் போஸ்ட் செய்திருக்கிறார். அதை பார்த்த மாளவிகாவின் ரசிகர்களோ, இந்த ஆளை அடித்தால் என்ன என கேட்டுள்ளனர். மற்றவர்களோ, கெட்ட பய சார் இந்த பிரேம்ஜி என்று தெரிவித்துள்ளனர்.

Twitter-PREMGI

வெங்கட் பிரபு

பிரேம்ஜி அமரனுக்கு ஒரு பெண்ணை பார்த்து சட்டுப்புட்டுனு கல்யாணம் செய்து வைக்கும் வழியை பாருங்க வெங்கட் பிரபு என்று ரசிகர்கள் கூறியுள்ளனர். மொரட்டு சிங்கிளாக இருப்பதால் தான் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்தால் இப்படி ஆகிவிடுகிறார் பிரேம்ஜி என்று ரசிகர்கள் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

காமெடி

கணவன், மனைவி காமெடியை அவ்வப்போது ட்விட்டரில் வெளியிடுபவர் பிரேம்ஜி. அப்படி அவர் அண்மையில் வெளியிட்ட தலைவலி காமெடியை பார்த்தவர்களோ, இப்படியே ட்வீட் செய்து கொண்டிருந்தால் இந்த ஜென்மத்தில் உங்களுக்கு திருமணம் நடக்காது என்றார்கள். பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம் என்று தகவல் வெளியானதே தவிர அது குறித்த எந்த அப்டேட்டும் இல்லை.