இந்திய அளவில் மிகப்பெரிய ஹிட்டித்த கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வெளியீட்டிற்கு காத்து கொண்டிருக்கிறது. ஜூலை 16-ம் தேதி வெளியாக இருந்த ‘கே.ஜி.எஃப் 2‘ படம் கொரோனா இரண்டாம் அலையால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’கேஜிஎஃப்’. இந்திய அளவில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வெளியீட்டிற்கு காத்து கொண்டிருக்கிறது. நடிகர் யாஷ் உடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்ட நடசத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

அண்மையில் ‘கேஜிஎஃப் 2’ படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அப்போது கடந்த ஜூலை மாதம் 16-ஆம் தேதி ‘கேஜிஎஃப் 2’ படம் உலகம் முழுக்க வெளியாகும் அறிவித்திருந்தனர் படக்குழு. ஆனால், கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தால் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட பல மாநிலங்களில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால்,‘கேஜிஎஃப் 2’ படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்தனர் படக்குழுவினர்.

நயன்தாராவை தொடர்ந்து ஆண்ட்ரியாவிற்கு வில்லனாகும் நடிகர் அஜ்மல்!
இந்நிலையில் ‘கேஜிஎஃப் 2’ படத்தின் சாட்டிலைட் உரிமையை தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் ஜீ நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல், அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். எனவே தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் ஜீ தொலைக்காட்சியில் இந்த படம் ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரபல ஓடிடி தளம் பெரும் தொகைக்கு ‘கேஜிஎஃப் 2’ படத்தை நேரடியாக வெளியிட கேட்டும் படக்குழுவினர் மறுத்துள்ளனர். ‘கேஜிஎஃப் 2’ படத்தை திரையரங்களில் தான் வெளியிட வேண்டும் என படக்குழுவினர் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விரைவில் இந்த படத்தின் தியேட்டர் ரிலீஸ் தேதி குறித்த செய்திகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.