‘மாநகரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இரண்டாவது படம் கைதி. நடிகர் கார்த்தி, அஞ்சாதே நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான கைதி திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.

தமிழ் சினிமா ரசிகர்களை எல்லாம் கடந்து, இந்தியளவில் பல பிரபலங்களின் பாராட்டுக்களை பெற்றதோடு, பல்வேறு விருதுகளையும் வென்றது ‘கைதி’ படம். தற்போது இந்தியிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. ‘கைதி’ படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ படத்தை இயக்கி வெற்றி கண்ட லோகேஷ் கனகராஜ் தற்போது கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்‘ படத்தை இயக்கி வருகிறார்.

தமிழ் ரசிகர்கள் மத்தியிலும், கார்த்தி ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டுகளை பெற்ற இந்த படம் தற்போது ஜப்பானிய மொழியில் வெளியாக உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பு குழு அண்மையில் வெளியிட்டனர். அதன்படி ஜப்பானில் ‘கைதி டில்லி’ என்ற பெயரில் இப்படம் வருகிற நவம்பர் 19 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

‘ஜெய் பீம்’ நாயகரை நேரில் சந்தித்து நினைவுப்பரிசு வழங்கிய தமிழ் சினிமா இயக்குனர்கள்!
‘கைதி’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியிலே அடுத்த பாகம் உருவாகும்படி தான் படத்தைமுடித்திருப்பார் லோகேஷ் கனகராஜ். அன்றிலிருந்தே கைதி 2 எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். இந்நிலையில் ‘கைதி’ இரண்டாம் பாகத்திற்கான பெரும்பாலான காட்சிகளை முதல் பாகம் எடுக்கும் போதே படமாக்கி விட்டதாகவும், இன்னும் 30 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டி இருக்கும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. லோகேஷ் கனகராஜ் தற்போது கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார். கார்த்தி முத்தையா இயக்கத்தில் ‘விருமன்‘ படத்தில் நடித்து வருகிறார். இந்த படங்களை முடித்த பின்னர் இருவரும் கைதி இரண்டாம் பாகத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

“விநோதய சித்தம்” நாடகம் – உலகநாயகன் கமல்ஹாசன் பாராட்டு!