நடிகர் பேர்ல் வி பூரி ஒரு அப்பாவி என்று பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமியின் தாயும், நடிகையுமான ஏக்தா சர்மா தெரிவித்துள்ளார்.

பேர்ல் வி பூரி

2019ம் ஆண்டு 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இந்தி தொலைக்காட்சி தொடர்கள், படங்களில் நடித்து வரும் பேர்ல் வி பூரியை மும்பை போலீசார் கைது செய்தனர். பேர்ல் அப்படிப்பட்டவர் இல்லை என்று சில நடிகைகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் சிறுமியின் தாயும், நடிகையுமான ஏக்தா சர்மாவின் குடும்பத்தை சேர்ந்த ஆர்த்தி பூரி என்பவர் விளக்கம் அளித்திருக்கிறார்.

ஆதரவு

பேர்ல் விவகாரம் பற்றி ஆர்த்தி பூரி இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது, கடந்த 10 ஆண்டுகளாக ஏக்தா சர்மா தன் திருமண வாழ்க்கையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். 2 ஆண்டுகளாக அவரின் மகள் அவருடன் இல்லை. ஏக்தா உள்பட நாங்கள் அனைவரும் பேர்ல் வி பூரிக்கு ஆதரவு அளிக்கிறோம். விரைவில் நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம் என்றார்.

போராட்டம்

மகளை தன்னுடன் வைத்துக் கொள்ள ஏக்தா சர்மா போராடிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவரின் கணவர் இப்படி ஒரு பிரச்சனையை உருவாக்கி, பழி போடுகிறார். நீதித் துறைக்கு முன்பு ஏக்தா சர்மாவின் பெயரை கெடுத்து, மகளை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவே அவர் இப்படி செய்கிறார். ஏக்தா சர்மா பேரதிர்ச்சியில் இருக்கிறார். அவருக்கு உங்களின் ஆதரவு தேவை. பேர்ல் வி பூரி ஒரு அப்பாவி. அதனால் ஏக்தா அவரை ஆதரிக்கிறார். தேவையில்லாமல் பேர்ல் மீது பழிபோடப்பட்டிருப்பதை ஏக்தா புரிந்து கொண்டுள்ளார். ஏக்தாவின் கணவர் அனில் எழுதிய கேவலமான திரைக்கதை இது. உண்மை வெளியே வரும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று ஆர்த்தி கூறியுள்ளார். ஆர்த்தியின் போஸ்ட்டை ஏக்தா சர்மா இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்திருக்கிறார்.

நடிகைகள்

பேர்ல் வி பூரி அப்பாவி என்று நாகினி தொடரில் அவருடன் சேர்ந்து நடித்த அனிதா ஹசநந்தனி தெரிவித்தார். மேலும் பேர்லுக்காக நடிகை யாஷிகா ட்வீட் செய்தார். சிறுமியை பலாத்காரம் செய்யும் ஆள் இல்லை என்றார். இது எல்லாம் சிறுமியின் தந்தை அனில் போடும் நாடகம் என்று நடிகையும், தயாரிப்பாளருமான திவ்யா கோஸ்லா குமார் கூறினார். இந்நிலையில் பேர்ல் ஒரு அப்பாவி என்று சிறுமியின் குடும்பத்தாரே தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.