ஹைலைட்ஸ்:

  • யோ யோ ஹனி சிங் மீது மனைவி புகார்
  • பல பெண்களுடன் ஹனி சிங்கிற்கு தொடர்பு: ஷாலினி தல்வார்

பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர் பிரபல பாடகரும், இசையமைப்பாளருமான யோ யோ ஹனி சிங். அவரின் இயற்பெயர் ஹிர்தேஷ் சிங். அவருக்கும், ஷாலினி தல்வார் என்பவருக்கும் கடந்த 2011ம் ஆண்டு திருமணம் நடந்தது.

இந்நிலையில் ஹனி சிங் தன்னை கொடுமைப்படுத்துவதாக டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் ஷாலினி. அவரின் மனுவை விசாரித்த நீதிபதி, ஆகஸ்ட் 28ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு ஹனி சிங்கிற்கு உத்தரவிட்டுள்ளார்.

ஷாலினி தன் மனுவில் கூறியிருப்பதாவது,

ஹனி சிங் என்னை உடல் அளவிலும், மனதளவிலும் பலமுறை கொடுமைப்படுத்தியிருக்கிறார். ஹனி சிங் தன் பாடல்கள், நிகழ்ச்சிகள், ராயல்டிகள் மூலம் மாதம் ரூ. 4 கோடி சம்பாதித்தார். அந்த நேரத்தில் தான் அவர் மது, போதைப்பொருளுக்கு அடிமையானார்.

அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது. ஹனி சிங்கிற்கும் பஞ்சாபி நடிகை ஒருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருக்கிறது. அது குறித்து நான் கண்டுபிடித்து கேட்டபோது, இனிமேல் இப்படி செய்ய மாட்டேன், நடிகையை பிரிந்துவிடுகிறேன் என்றார்.

அவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் முன்பு டென்ஷன் ஆனார். சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு மேடைக்கு செல்லுங்கள் என்று நான் கூறினேன். அதற்கு அவர் என்னை அடித்ததுடன், திட்டவும் செய்தார் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

பெயர் கெட்டுப் போச்சு: ரூ. 25 கோடி கேட்டு மீடியாக்கள் மீது நடிகை வழக்கு