தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரசின்தாக்கம் ஒவ்வொரு நாளும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவின் இரண்டாவது அலையால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை கூடி கொண்டே சென்றாலும், தமிழக அரசு பிறப்பித்த ஊரடங்கின் காரணமாக நோயின் தாக்கம் சற்று குறைய துவங்கியுள்ளது.

கொரோனா இரண்டாம் அலையால் திரையுலக பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில வாரங்களாக கொரோனாவின் தாக்கம் குறைந்த வருவது மக்கள் மத்தியில் நிம்மத்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகர் பாலசரவணன் தந்தை கொரோனாவால் உயிரிழந்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் திரை உலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்றிய அரசுக்கு எதிராக பேசிய பெண் இயக்குனர்: தேசத்துரோக வழக்கு பதிந்த போலீசார்!
தமிழ்சினிமாவில் குணச்சித்திர நடிகராக திகழும் பாலசரவணன் தந்தை எஸ்ஏ ரங்கநாதன் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மதுரை மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. மறைந்த எஸ்ஏ ரங்கநாதன் அவர்களுக்கு வயது 60 என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து திரையுலகினர் பாலசரவணன் குடும்பத்திற்கு இரங்கலும் ஆறுதலும் கூறி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த மே மாதம் பாலசரவணன் தங்கை கணவர் கொரோனாவால் உயிரிழந்தார் இதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து இருந்த பாலசரவணன் தயவு செய்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், முகக்கவசம் அணிந்து இருங்கள், கொரோனா நம்மை தாக்காது என அசால்ட்டாக இருக்க்காதீர்கள் என அறிவுரை வழங்கி இருந்தார். இந்நிலையில் தற்போது அவரது தந்தையும் கொரோனா தொற்றால் உயிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து திரையுலகினர் பலர் பாலசரவணன் குடும்பத்திற்கு இரங்கலும் ஆறுதலும் தெரிவித்து வருகின்றனர்.