ஹைலைட்ஸ்:

  • சந்தீப் கிஷனுக்கு முத்தம் கொடுத்த விஜய் சேதுபதி
  • புதுப்படத்தில் சேர்ந்து நடிக்கும் விஜய் சேதுபதி, சந்தீப் கிஷன்

விஜய் சேதுபதியை பார்ப்பது என்றால் ரசிகர்களுக்கு அவ்வளவு பிடிக்கும். அதற்கு காரணம் அந்த முத்தம். எந்த ரசிகராக இருந்தாலும் கட்டிப்பிடித்து கன்னத்தில் நச்சுனு ஒரு முத்தம் கொடுப்பார் விஜய் சேதுபதி. அப்படி அவரிடம் முத்தம் வாங்கி புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டவர்கள் பலர்.

கொரோனா காலமாக இருப்பதால் ரசிகர்களுக்கு முத்தம் கொடுப்பதை நிறுத்தி வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி. இந்நிலையில் சந்தீப் கிஷனும், விஜய் சேதுபதியும் சேர்ந்து நடிக்கவிருப்பதாக பேச்சு கிளம்பியது. அதை சந்தீப் கிஷன் உறுதி செய்திருக்கிறார்.
விஜய் சேதுபதி தனக்கு முத்தமிட்டதையும், தான் அவருக்கு முத்தம் கொடுத்ததையும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் சந்தீப் கிஷன்.

அவர்கள் இருவரும் எந்த படத்தில் சேர்ந்து நடிக்கப் போகிறார்களாம் என்று ரசிகர்கள் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். தி ஃபேமிலி மேன் வெப்தொடர் புகழ் ராஜ் மற்றம் டிகே இயக்கவிருக்கும் படத்தில் தான் விஜய் சேதுபதியும், சந்தீப் கிஷனும் சேர்ந்து நடிக்கவிருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அந்த படத்தை பரத் சவுத்ரி தயாரிக்கிறாராம். விஜய் சேதுபதி தற்போது கை நிறைய படங்கள் வைத்திருக்கிறார். மேலும் ராஜ், டிகே இயக்கத்தில் இந்தி வெப் தொடரில் ஷாஹித் கபூர், ராஷி கன்னாவுடன் சேர்ந்து நடித்து வருகிறார்.

இது தவிர்த்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து வரும் விக்ரம் படத்தில் அவருக்கு வில்லனே விஜய் சேதுபதி தான்.

அடப்பாவமே, கல்யாணம் முடிந்த மறுநாளே சினேகன் வாழ்க்கையில் இப்படி ஒரு திருப்பமா!