ஹைலைட்ஸ்:

  • நடிகர் சாஹில் சதா மீது மோதிய ஆம்புலன்ஸ்
  • கொரோனாவில் இருந்து குணமடைந்த சாஹில்
  • காயங்களுடன் மருத்துவமனையில் சாஹில்

அமிதாப் பச்சன், ஹேமமாலினி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான பாக்பான் இந்தி படத்தில் அவர்களுக்கு மகனாக நடித்தவர் சாஹில் சதா. இந்தி படங்களில் நடித்து வரும் சாஹிலும், தன் மனைவி ப்ரொமிளாவும் கடந்த 12ம் தேதி மும்பையில் ஒரு இடத்திற்கு சென்றிருக்கிறார்கள்.

தங்கள் வேலை முடிந்த பிறகு கணவனும், மனைவியும் காரில் ஏற வந்திருக்கிறார்கள். அப்பொழுது அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் அவர்களின் பின்னால் மோதியது. இதில் ப்ரொமிளாவின் கால் எலும்பில் இரண்டு இடங்களில் முறிவு ஏற்பட்டது. சாஹிலுக்கு வயிறு மற்றும் தொடை பகுதியில் காயம் ஏற்பட்டது.

சிகிச்சைக்கு பிறகு ப்ரொமிளா தன் உறவினர் வீட்டில் தங்கியிருக்கிறார். சாஹில் இன்னும் மருத்துவமனையில் தான் இருக்கிறார். அவர் இன்று அல்லது நாளை வீடு திரும்பக்கூடும் என்று கூறப்படுகிறது.

விபத்து குறித்து சாஹில் கூறியதாவது,

ஏதோ பெரிய பிரச்சனையில் இருந்து தப்பியது போன்று உணர்கிறேன். நான் இன்னும் சில நாட்களுக்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் தான் இருக்க வேண்டும். ஆனால் கடவுள் என் மீது அன்பாக இருக்கிறார். நடந்ததை நினைத்து அதிர்ச்சியாகவும், பயமாகவும் இருக்கிறது.

ஆம்புலன்ஸ் டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர் என்றார்.

சாஹிலுக்கும், ப்ரொமிளாவுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது ஏப்ரல் மாதம் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர். 20 நாட்கள் குவாரன்டைனில் இருந்த அவர்கள் தற்போது தான் குணமடைந்தனர்.

கொரோனாவில் இருந்து குணமடைந்த கையோடு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சாஹில்.

சூப்பர் ஸ்டாருக்கு அடி மேல் அடி: பாவம்யா அந்த மனுஷன்