ஹைலைட்ஸ்:

  • திரைத்துரையினரை மிரட்டும் கொரோனா இரண்டாம் அலை.
  • மே 31 ஆம் தேதி வரை சினிமா படப்பிடிப்புகள் ஒத்திவைப்பு.
  • பெப்சி தொழிலாளர்களுக்கு 10 லட்சம் நிதி வழங்கிய அஜித்குமார்.

கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருவதால் தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை மேலும் தீவிரமாக்கியுள்ளது. . அதன்படி அத்தியாவசிய தேவையான மளிகை மற்றும் காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டும் செயல்படும் எனவும், தேநீர் கடைகள் இயங்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அனைத்து அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக மே 31 ஆம் தேதி வரை படப்பிடிப்புகள் எதுவும் நடக்காது என்றும் தென்னிந்திய திரைப்படத்‌ தொழிலாளர்கள்‌ சம்மேளனமான ஃபெப்ஸி அமைப்பின் தலைவரும், இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

பொதுமக்களும், திரை பிரபலங்களும் தொடர்ச்சியாக கொரோனாவினால் மரணமடைந்து வருவது மக்கள் மத்தியில் பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுவரை கொரோனாவுக்கு இயக்குநர்கள் தாமிரா, கேவி ஆனந்த், தயாளன், நடிகர்கள் பாண்டு, ஜோக்கர் துளசி, பாடகர் கோமகன் உள்ளிட்டோர் மரணமடைந்துள்ளனர். மேலும் பல பிரபலங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தங்களை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவுத் தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா நிவாரண நிதியை தொடர்ந்து பெப்சி தொழிலாளர்களுக்கு உதவிய தல!
இந்நிலையில் பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி சென்னை வடபழனியில் செய்தியாளர்களை சந்தித்து சினிமா மற்றும் சின்னத்திரை சம்பந்தமான படப்பிடிப்புகள் எதுவும் நிகழாது என தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கொரோனாவால் சினிமா பிரபலங்கள் அதிகளவில் உயிரிழப்பதாகவும் தெரிவித்துள்ள ஆர்கே செல்வமணி தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வருகின்ற மே 31 ஆம் தேதி வரை படப்பிடிப்புகள் நிறுத்தப்படுவதாக கூறியுள்ளார்.

மேலும் சினிமா தொழிலாளர்களை காக்க உச்ச நடிகர் மற்றும் நடிகைகள் உதவ முன் வரவேண்டும் என்றும் ஆர்கே செல்வமணி கோரிக்கை விடுத்துள்ளார். நடிகர் அஜித் பெப்சி தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியிருப்பதாகவும் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் ஆர்கே செல்வமணி.