ஹைலைட்ஸ்:

  • ஓடிடியில் ரிலீஸாகும் மஹா படம்?
  • மஹா ரிலீஸ் குறித்து இயக்குநர் ஜமீல் விளக்கம்
  • விரைவில் மஹா பட அப்டேட் வரும்- ஜமீல்

யு. ஆர். ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடித்துள்ள படம் மஹா. இது ஹன்சிகாவின் 50வது படமாகும். மஹா படத்தில் விமானியாக கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார் சிம்பு. முதலில் கௌரவத் தோற்றம் என்றார்கள். ஆனால் அதன் பிறகு அவரின் கதாபாத்திரத்தை மாற்றி ஹீரோவாக்கிவிட்டார்களாம்.

ஹன்சிகாவின் காதலராக நடித்துள்ளார் சிம்பு. இந்நிலையில் மஹா படம் தியேட்டர்களில் அல்லாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகப் போகிறது என்று சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. அதை பார்த்த இயக்குநர் ஜமீல் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

மஹா ரிலீஸ் குறித்து ஜமீல் கூறியிருப்பதாவது,

பொய்யான செய்தி. சிலம்பரசன் சார் ரசிகர்களின் ஃபீலிங்ஸை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. மஹா படத்தை துவங்கி கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது என்பது எனக்கு தெரியும். ஆனால் மஹா குறித்த அப்டேட்டுக்குக்காக இன்னும் சில நாட்கள் காத்திருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

என் படமான மஹாவுக்கு எஸ்டிஆர் சார் ரசிகர்கள் அளித்து வரும் அன்புக்கும், ஆதரவுக்கும் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மஹா குறித்து உண்மையை சொன்ன ஜமீலுக்கு சிம்பு ரசிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். மஹா படத்தில் சிம்புவை தனக்கு காதலராக நடிக்க வைக்குமாறு ஜமீலிடம் பரிந்துரை செய்ததே ஹன்சிகா தானாம்.

முன்னதாக வாலு படத்தில் சேர்ந்து நடித்தபோது சிம்பு, ஹன்சிகா இடையே காதல் ஏற்பட்டது. ஆனால் அந்த காதல் துவங்கிய வேகத்தில் முறிந்துவிட்டது. ஹன்சிகாவுடனான காதல் முறிய தானோ, அவரோ காரணம் இல்லை என்றார் சிம்பு.

சிம்பு தன் முன்னாள் காதலி ஒருவருடன் சேர்ந்து நடிப்பது இது ஒன்றும் முதல் முறை அல்ல. முன்னதாக இது நம்ம ஆளு படத்தில் நயன்தாராவுடன் சேர்ந்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒய்.ஜி. மகேந்திரனிடம் தன் ஆசையை சொன்ன சிம்பு: என்ன, இப்படி கெளம்பிட்டாரு!அவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்துள்ளார். மாநாடு படத்தால் சிம்புவின் கெரியர் வேற லெவலுக்கு செல்லும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஒய்.ஜி. மகேந்திரனுடன் சேர்ந்து மேடை நாடகத்தில் நடிக்க ஆசைப்படுகிறார் சிம்பு.