மலையாள திரைப்பட உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை சனுஷா தமிழில் ரேணிகுண்டா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழில் பீமா’, ரேனிகுண்டா, நாளை நமதே, எத்தன், கொடி வீரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய உடல் எடை குறித்து கேலி பேசியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் நடிகை சனுஷா.

சில மாதங்களுக்கு முன்பு உண்டான மனச்சோர்வு மற்றும் உடல்நலப் பிரச்சினை காரணமாக இவரது உடல் எடை அதிகரித்தது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சனுஷா, தனது வலைத்தள பக்கத்தில் மனச்சோர்வு குறித்த பல்வேறு பதிவுகளையும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது தனது உடல் எடையைக் குறைக்கத் துவங்கியுள்ள சனுஷா, தனது உடல் எடையை முன்வைத்து கருத்து தெரிவித்தவர்களுக்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

ரசிகர்களை எச்சரிக்கும் நடிகர் சார்லி: காவல்துறையில் புகார்!
அதில், ‘எனது எடை குறித்துப் பேசிய, என்னை விட அதிகமாகவே கவலைப்பட்ட, அதிக வருத்தத்துக்கு உள்ளானவர்களுக்கு, அன்பார்ந்தவர்களே, எடை குறைக்கவும், அழகாக இருக்கவும் மட்டுமே ஒருவர் உயிர் வாழ்வதில்லை. ஒருவரது உடலை வைத்து கேலி செய்யும் அளவுக்கு உங்களுக்குத் தைரியம் இருக்கும் போது ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள்.

ஒருவரை நோக்கி இரண்டு விரல்களை நீங்கள் கட்டும்போது மற்ற மூன்று விரல்கள் உங்களை நோக்கியிருக்கிறது, எனவே நீங்களும் அவ்வளவு கச்சிதமானவர் கிடையாது. உங்கள் உடலையும், மனதையும் பார்த்துக் கொள்ளுங்கள்’ என தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார் நடிகை சனுஷா.