பாகுபலி திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு பல இயக்குனர்களின் பார்வை இதிகாச கதைகளை படமாக்குவதில் விழுந்துள்ளது. அந்த வகையில் பாலிவுட்டில் பிரபல இயக்குநராக இருந்துவரும் தேசாய் தற்போது சீதா பார்வையில் இருந்து ராமாயணக் கதையை இயக்க திட்டமிட்டிருக்கிறார். இந்த படத்தில் சீதாவாக நடிக்க கரீனா கபூரிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை கரீனா கபூர் தனது திருமணத்திற்கு பிறகு சினிமாக்களில் அதிகம் தலைக்காட்டாமல் இருக்கிறார். இதனால் சில படங்களில் கெஸ்ட் ரோல்களில் மட்டுமே நடித்து வருகிறார்.இந்நிலையில் இராமாயண கதையில் சீதாவாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூரை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.

ஊரடங்கை மீறி ஹாயாக சுற்றி திரிந்த நட்சத்திர காதலர்கள்: வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்!
ஆனால் இந்தப் படத்தில் நடிக்க கரீனா கபூர் 12 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. இது புராண கதை என்பதால் கரீனா அதிக தொகையை சம்பளமாக கேட்டுள்ளாராம். அது மட்டுமில்லாமல் இந்த படத்தின் படப்பிடிப்பு 8 முதல் 10 மாதங்கள் வரை நடக்கும் என்பதால் அதிக தொகையை சம்பளமாக அவர் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் சீதா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு படக்குழுவினர் வேறு ஒரு நடிகையை தேடி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பே ராமாயணக் கதையை பல இயக்குநர்கள் திரைப்படமாக்க முயற்சியில் ஈடுபட்டனர். மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் ஆயிரம் கோடி மதிப்பீட்டில் ராமாயணக் கதை எடுக்கப் போவதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.