ஹைலைட்ஸ்:

  • ப்ரியா பவானி சங்கரின் பிரச்சனை ட்வீட்
  • ப்ரியாவுக்கு ஆறுதல் கூறிய சதீஷ்

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் நடிகை ப்ரியா பவானி சங்கர். என்ன தான் படங்களில் பிசியாக இருந்தாலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.

தன்னை தானே கலாய்த்து ட்வீட் போடுவார், யாராவது தன்னை கிண்டல் செய்து மீம்ஸ் போட்டால் கூட ஜாலியாக எடுத்துக் கொள்பவர் ப்ரியா.

இந்நிலையில் அவர் போட்ட ஒரு ட்வீட் பலரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டது.

நான் ஒரு கிரியேட்டிவான ஆள். என்ன கிரியேட் பண்ணுவீங்க…?

நானே ஏதாச்சும் தேவையில்லாத பிரச்சனைகளை கிரியேட் பண்ணிப்பேன் என்று வெளியான புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு தானும் அப்படித் தான் என்றார் ப்ரியா.

அந்த ட்வீட்டை பார்த்த நடிகர் சதீஷோ, எனக்கு தெரியும் ப்ரியா. சீக்கிரம் முடிஞ்சிடும். கவலைப்படாதே என ஆறுதல் கூறியுள்ளார்.
சதீஷ் ஏகோ நக்கல் அடிக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது. ஆனால் ப்ரியாவுக்கு என்ன பிரச்சனையாக இருக்கும் என்று ரசிகர்கள் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவரே ஒரு GIF வீடியோவை வெளியிட்டார்.
அதை பார்த்தவர்களோ, தலைமுடிக்கு கலர் பண்ணும்போது அல்லது புது ஸ்டைல் செய்யும்போது ஏதோ ஆகிவிட்டது போன்று. இல்லை என்றால் தலைமுடி கொட்டுகிறதோ என்கிறார்கள்.
ப்ரியா தற்போது தனுஷ் ஜோடியாக திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார். அதனால் படம் குறித்து ஏதாவது அப்டேட் கொடுங்க ப்ரியா என தனுஷ் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இது தவிர்த்து ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் ஏவி33 படத்திலும் நடிக்கிறார் ப்ரியா.

பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம்: பொண்ணு நம்ம குக் வித் கோமாளி…