ஹைலைட்ஸ்:

  • பிக் பாஸ் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்
  • 5 சீசன் டீலுக்கு ஒப்புக் கொண்ட கமல் ஹாசன்
  • த்ரிஷ்யம் 2 ரீமேக்கில் நடிக்கும் கமல்?

பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட்டானதை அடுத்து பிற மொழிகளிலும் நடத்த துவங்கினார்கள். தமிழில் இதுவரை நான்கு சீசன்கள் முடிந்திருக்கிறது. முதல் சீசனில் இருந்து இதுவரை உலக நாயகன் கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் ஒவ்வொரு சீசன் துவங்கும் முன்பும் இந்த முறை கமல் அல்ல மாறாக வேறு ஒரு நடிகர் தொகுத்து வழங்குவார் என்று பேச்சு கிளம்பி அடங்குவது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனை சிம்பு தொகுத்து வழங்கப் போவதாக கூறப்பட்டது. ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை.

முந்தைய சீசன்களை போன்றே இந்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்கப் போகிறார். இந்நிலையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கமலுடன் போட்ட டீல் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.

அதாவது 5 சீசன்களை தொகுத்து வழங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறாராம் கமல். இது குறித்து அறிந்தவர்களோ, ஏனுங்க ஆண்டவரே, 5 சீசனுக்கும் நான் தான் என்று ஒரு வார்த்தை சொல்லப்படாதா?. ஒவ்வொரு சீசனிலும் இந்த முறை யார் தொகுத்து வழங்குவார் என்று பேச்சு கிளம்பிய போது எல்லாம் பார்த்து சிரித்தீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்டது. தேர்தல் செலவுக்காக பிக் பாஸ் ஏற்பாட்டாளர்களிடம் கமல் முன்பணம் வாங்கியதாக அந்த கட்சியில் இருந்து விலகிய ஒருவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் கொஞ்சம் இருப்பா: கௌதமி இல்லாமல் த்ரிஷ்யம் 2 ரீமேக்கில் நடிக்கும் கமல்?கெரியரை பொறுத்தவரை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்கவிருக்கிறார் கமல். மேலும் இந்தியன் 2 படம் குறித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்கிறார். இந்நிலையில் விக்ரம் பட வேலையை துவங்கும் முன்பு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் த்ரிஷ்யம் 2 ரீமேக்கில் நடிக்கப் போகிறார் கமல் என்று கூறப்படுகிறது.