தமிழ்த் திரையுலகில் காமெடி நடிகராகப் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருப்பவர் சதீஷ். தற்போது ஹீரோவாகாவும் நடித்து வருகிறார்.அண்மையில் சதீஷ் ஹீரோவாக அறிமுகமாகும் படத்திற்கு ‘நாய் சேகர்’ என டைட்டில் வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டனர் படக்குழுவினர்.இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை சன்னிலியோனுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சதீஷ்.

கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நாய் சேகர்’ படத்தில் குக்வித் கோமாளி பவித்ரா லட்சுமி நாயகியாக நடித்துள்ளார். மேலும், இந்தப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நாய் ஒன்றும் சதீஷுடன் நடித்துள்ளது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

‘நாய் சேகர்’ படத்தை தொடர்ந்து நடிகர் சதீஷ் தற்போது ”ஓ மை கோஸ்ட்” என்னும் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல நடிகை சன்னி லியோனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சதீஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் சன்னி லியோனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும், சன்னி லியோனுடன் பணிபுரிந்தது பற்றியும் அந்த பதிவில் கூறியுள்ளார்.

ஹீரோ அவதாரம் எடுக்கும் ‘கோமாளி’ பட இயக்குனர்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அதில், திரையுலகில் நான் சந்தித்த நபர்களில் மிகவும் இனிமையான நபர்களில் ஒருவர் சன்னி லியோன். அவர் நல்ல நடிகை அதைவிட மிக அபாரமான டான்ஸர். அவருடன் பணிபுரிவது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. அவர் ஒரு மிகச் சிறந்த மனிதநேய மிக்கவராக உள்ளார் என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த புகைப்படத்திற்கு கீழ் ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

படம் ரிலீஸ் பண்ண விடமாற்றங்க.! புலம்பி தள்ளிய ப்ளூ சட்டை மாறன்