சூரரை போற்று திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் தனது 40 படத்தில் நடித்து வருகிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் துவங்கியுள்ளது. இந்நிலையில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வருகின்ற 22 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். இவர் டாக்டர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ், திவ்யா, வினய், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் கையில் நீண்ட வாளுடன் சூர்யா, திரும்பி நடந்து செல்வது போன்ற படத்தின் போஸ்டர் ஒன்று அண்மையில்வெளியாகி வைரலானது. இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து வருவதால் திரைத்துறை சம்பந்தமான பணிகள் வழக்கம் போல் நடைபெற துவங்கியுள்ளன. அந்த வகையில் ‘சூர்யா 40‘ திரைப்படத்தின் படப்பிடிப்பும் அண்மையில் துவங்கியது.

டார்ஜிலிங் சென்ற சியான் 60 படக்குழுவினர்: இறுதிக்கட்ட படப்பிடிப்பு துவக்கம்!
இந்நிலையில் வருகின்ற ஜூலை 23 ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகுமா என ஆர்வமுடன் காத்திருந்தனர் ரசிகர்கள். அவர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் விதமாக சூர்யா 40 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வருகின்ற ஜூலை 22 ஆம் தேதி மாலை ஆறு மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதனால் உற்சாகத்தில் இருக்கின்றனர் சூர்யா ரசிகர்கள்.

பாண்டிராஜ் திரைப்படத்தை முடித்தவுடன் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா. வாடிவாசல் என தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான இந்தப்படத்தின் டைட்டில் லுக் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.