ஹைலைட்ஸ்:

  • அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடர்.
  • ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடர் குழுவினரை வாழ்த்திய ரகுல் பரீத் சிங்.
  • இந்த தொடரில் தமிழீழப் போராளிகளை தவறாக சித்தரித்துள்ளதாக குற்றச்சாட்டு.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான ‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் சீரிஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, ஷரத் கேல்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த தொடரில் சமந்தா வில்லியாக நடித்துள்ளார்.. ராஜ் மற்றும் டிகே இரட்டை இயக்குனர்கள் இந்தத் தொடரை இயக்கியுள்ளனர்.

ராஜ் மற்றும் டிகே என்ற இரட்டை இயக்குனர்கள் இயக்கத்தில் இந்தியில் கடந்த 2019 ஆம் ஆண்டு அமேசான் ப்ரைமில் வெளியான வெப்சீரிஸ் பேமிலிமேன். மும்பை குண்டு வெடிப்பை மையமாக கொண்ட உருவாக்கப்பட்ட வெப் சிரிஸில் மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்நிலையில், இதன் இரண்டாவது சீசன் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அமேசான் பிரைமில் வெளியானது. இந்த சீசனில் நடிகை சமந்தா ராஜி எனும் தற்கொலைப் படையை சேர்ந்த நபராக நடித்துள்ளார்.

இந்நிலையில் ‘பேமிலி மேன் 2’ தொடரை பார்த்து விட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் அது குறித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங். அதில், ‘பேமிலி மேன் 2’ தொடர் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் நடித்துள்ள அனைவரும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இத்தொடரில் மனோஜ் பாஜ்பாய் எத்தகைய நடிப்பை வழங்கியிருந்தார் என்பதை சொல்ல எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை.

மாஸ்டர் பட நடிகையை எழுந்து நின்று வாழ்த்திய ரஜினிகாந்த்: மாளவிகா மோகனன் பெருமிதம்!
சமந்தாவுக்கு தலைவணங்குகிறேன். நீங்கள் ஒரு நெருப்புப் பெண். ராஜி கதாபாத்திரத்தை நீங்க அட்டகாசமான வகையில் ஏற்று நடித்திருக்கிறீர்கள். என்னைப் போலவே என் குடும்பமும் உங்கள் ரசிகர்களாக மாறி விட்டார்கள் என பேமிலி மேன் பட குழுவினரை தனது ட்விட்டர் பக்கத்தில் புகழ்ந்து தள்ளியுள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.

இந்நிலையில் இந்த வெப் தொடரில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்று இருப்பதாக தற்போது கண்டனங்கள் வெடிக்கத் துவங்கியுள்ளன. விடுதலை புலிகள் இயக்கத்தையும் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கையும் மையப்படுத்தியே இந்த வெப் தொடர் உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.