ஹைலைட்ஸ்:

  • வெளிநாட்டு படத்தில் நடிக்கும் சமந்தா
  • bisexual தமிழ் பெண்ணாக நடிக்கும் சமந்தா

காதல் கணவரான நாக சைதன்யாவை பிரிந்த பிறகு சமந்தாவை தேடி பட வாய்ப்புகள் வந்து குவிகிறது. இந்நிலையில் முதல் முறையாக வெளிநாட்டு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் சமந்தா.

Arrangements of Love என்கிற அந்த படத்தை பிலிப் ஜான் இயக்குகிறார். அந்த படத்தில் துப்பறியும் நிறுவனம் நடத்தும் 27 வயது bisexual தமிழ் பெண்ணாக நடிக்கிறார் சமந்தா.

திமேரி என். முராரி எழுதிய Arrangements of Love என்கிற நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் படம் அது.

Arrangements of Love படத்தில் நடிப்பது குறித்து சமந்தா கூறியிருப்பதாவது,

பிலிப் ஜான் இயக்கத்தில் நடிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் பல ஆண்டுகளாக அவரின் படைப்புகளை பார்த்து வருகிறேன். அவரின் Downton Abbey-ன் ரசிகை நான். மீண்டும் சுனிதாவுடன் சேர்ந்து பணியாற்ற காத்துக் கொண்டிருக்கிறேன்.

ஓ பேபி படத்தை விட பெரிய அளவில் வெற்ற பெறுவோம் என்று நம்புகிறேன். என் கதாபாத்திரம் சிக்கலானது. அது எனக்கு சவாலும், புது வாய்ப்பும் ஆகும். செட்டுக்கு செல்ல காத்திருக்கிறேன் என்றார்.

Arrangements of Love படத்தை குரு ஃபிலிம்ஸின் சுனிதா தயாரிக்கிறார். அவர் முன்னதாக சமந்தாவுடன் சேர்ந்து ஓ பேபி படத்தில் வேலை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பு 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து வித்தியாசமான மற்றும் சவாலான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார் சமந்தா. இந்நிலையில் அவர் bisexual தமிழ் பெண்ணாக நடிப்பது குறித்து அறிந்தவர்கள் ஏற்கனவே விமர்சிக்கத் துவங்கிவிட்டனர்.

தனுஷை அடுத்து போயஸ் கார்டனில் வீடு வாங்கியிருக்கும் நயன்தாரா