ஹைலைட்ஸ்:

  • கணவரை பிரிந்த சமந்தா
  • ஹோட்டலில் தங்கியிருக்கும் நாக சைதன்யா

சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில் மனமொத்து பிரிவதாக அக்டோபர் 2ம் தேதி அறிவிப்பு வெளியிட்டனர்.

அறிவிப்பு வெளியிடும் முன்பே நாக சைதன்யா சமந்தாவை பிரிந்து தன் தந்தை நாகர்ஜுனாவின் வீட்டில் வசித்து வந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் அவர் அப்பா வீட்டிற்கு செல்லவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது.

பிரிவது என்று முடிவு செய்த உடனேயே வீட்டை காலி செய்துவிட்டு ஹைதராபாத்தில் இருக்கும் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தனியாக தங்கியுள்ளாராம் நாக சைதன்யா. விவாகரத்து அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பு ஒரு மாதமாக அவர் ஹோட்டலில் தான் தாங்கியிருந்தாராம்.

Samantha:2 நடிகைகள், பொறாமை, டிசைனர், குழந்தை: சமந்தா, நாக சைதன்யா பிரிய காரணம்?

சேகர் கம்முலா இயக்கத்தில் நாக சைதன்யா நடித்த லவ் ஸ்டோரி படம் செப்டம்பர் 24ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. அந்த படம் ரிலீஸாகும் வரை விவாகரத்து குறித்து அறிவிக்க வேண்டாம் என்று காத்திருந்தார்களாம்.

லவ் ஸ்டோரி படம் சூப்பர் ஹிட்டாகிவிட்டது. படம் ரிலீஸான 10 நாட்களில் உலகளவில் ரூ. 55 கோடி வசூல் செய்திருக்கிறது.