பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. பாக்சிங்கை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்நிலையில் சார்பட்டா பரம்பரை படத்தை பார்த்து ரசித்த கமல்ஹாசன், படக்குழுவினரை நேரில் அழைத்து பாரட்டு தெரிவித்துள்ளளார்.

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களை தொடர்ந்து தற்போது சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கி உள்ளார் பா.ரஞ்சித். சார்பட்டாவில் பாக்ஸிங் வீரராக ஆர்யா, ரங்கர் வாத்தியாராக பசுபதி நடித்துள்ளனர். இவர்களுடன் அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், சந்தோஷ் பிரதீப் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ள இந்தப்படம் குறித்து அனைவரும் பாசிட்டிவான கருத்துகளையே கூறி வருகின்றனர்.

வடசென்னையில் எண்பதுகளில் பிரபலமாக இருந்த குத்துச் சண்டை அணிகளைப் பற்றி அடிப்படையாக கொண்டு இந்தப்படம் உருவாகியுள்ளது. சார்பட்டா பரம்பரை, இடியப்ப பரம்பரை என இரண்டு அணிகள் குத்துச் சண்டையில் மோதுவதை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்தப்படத்தின் மேக்கிங் அற்புதமாக உள்ளதாக பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் படத்தில் நடித்துள்ள அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளதாகவும் படக்குழுவினரை வாழ்த்தி வருகின்றனர்.

கனவு காணும் ஏராளமான பெண்களுக்கு ஊக்கமளித்துள்ளீர்கள்: பி.வி.சிந்துவுக்கு சூர்யா புகழாரம்!
இந்நிலையில் சார்பட்டா படத்தை பார்த்து ரசித்த நடிகர் கமல்ஹாசன், படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்தியுள்ளார். இயக்குனர் பா.ரஞ்சித், ஆர்யா, சஞ்சனா நடராஜன், கலையரசன், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர். இந்த சந்திப்பின் போது எடுக்கபட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.