பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் அமேசான ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ள ‘சார்பட்டா பரம்பரை‘ படம் அணைத்து தரப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பாக்சிங்கை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்திற்கு திரையுலக பிரபங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் ‘சார்பட்டா பரம்பரை’ உலகை வைத்து அதன் முன்கதையை வெப்சீரிஸாக எடுக்கும் எண்ணம் உள்ளது என தெரிவித்துள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித்.

சார்பட்டாவில் பாக்ஸிங் வீரராக கபிலன் கதாபாத்திரத்தில் ஆர்யா, ரங்கன் வாத்தியாராக பசுபதி நடித்துள்ளனர். இவர்களுடன் அனுபாமா குமார், சஞ்சனா நடராஜன், சந்தோஷ் பிரதீப் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ள இந்தப்படம் குறித்து அனைவரும் பாசிட்டிவான கருத்துகளையே கூறி வருகின்றனர்.

வடசென்னையில் எண்பதுகளில் பிரபலமாக இருந்த குத்துச் சண்டை அணிகளைப் பற்றி அடிப்படையாக கொண்டு இந்தப்படம் உருவாகியுள்ளது. படத்தில் நடித்துள்ள அனைத்து கதாபாத்திரங்களும் தனித்தனியாக பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித், ‘சார்பட்டா பரம்பரை’ உலகை வைத்து அதன் முன்கதையை வெப்சீரிஸாக எடுக்கும் எண்ணம் உள்ளது என தெரிவித்துள்ளார்.

மிரட்டலான தோற்றத்தில் பிரபுதேவா: இணையத்தில் வைரலாகும் ‘பொய்க்கால் குதிரை’ பர்ஸ்ட் லுக்!
அதில், “சார்பட்டா பரம்பரை கதை 80களில் நடப்பதைப் போல முதலில் யோசித்து வைத்திருந்தேன். அப்போது இறுதிக் காட்சியில் எம்ஜிஆர் வந்து விருது கொடுப்பது போலக் காட்சி வைத்தேன். பிறகு இந்தப் படத்தில் இருக்கும் அரசியல் நிலவரம் மற்றும் காலகட்டத்தால் அப்படி வைக்க விரும்பவில்லை. ஆனால், ஒரு வெப் சீரிஸ் எடுக்கும் எண்ணம் உள்ளது. அதில் நான் யோசித்த அனைத்தையும் காட்சிப்பபடுத்த இயலும் என்று நினைக்கிறேன். அதற்கான ஒரு கதையை இப்போது நான், தமிழ்ப் பிரபா, கரன் கார்க்கி, பாக்கியம் சங்கர் என நால்வரும் எழுத முயன்று வருகிறோம். இது சார்பட்டாவின் முன்கதையாக இருக்கும்.

1925-ல் ஆரம்பிக்கும் அந்தக் கதையை யோசிக்கும்போதே பின்னி மில் கலவரம் உள்ளிட்ட பல விஷயங்கள் சேர்ந்து பிரமிப்பாக இருக்கிறது. இதைத் திரைப்படமாக எடுக்கும் ஆசையும் இருக்கிறது. என்ன நடக்கும் என்று பார்க்கலாம்” என்று பா.இரஞ்சித் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய அடுத்த படைப்பாக ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற தலைப்பில் முழுக்க முழுக்க காதலை பிரதானப்படுத்தி ஒரு படம் இயக்க உள்ளார் பா.ரஞ்சித்.