ஹைலைட்ஸ்:

  • சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு கிளம்பும் ரஜினி
  • தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்லும் ரஜினி
  • அமெரிக்க பயணத்திற்காக மத்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்ற ரஜினி

ரஜினிகாந்துக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து அமெரிக்காவில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. அந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் அவ்வப்போது அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்று வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சனையால் ரஜினியால் அமெரிக்காவுக்கு செல்ல முடியாமல் இருந்தது. மேலும் சிறுத்தை சிவா இயக்கத்தில் தான் நடித்த வந்த அண்ணாத்த பட வேலையை முடிக்க வேண்டியிருந்தது.

அண்ணாத்த பட வேலையை நல்லபடியாக முடித்துக் கொடுத்துவிட்டார். ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் ரஜினி தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டது.

இதையடுத்து ஊர் திரும்பிய ரஜினி விரைவில் அமெரிக்காவுக்கு செல்வார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தனி விமானம் மூலம் அமெரிக்காவுக்கு செல்ல மத்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்றிருக்கிறாராம்.

விரைவில் அவர் தன் குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு செல்கிறார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. கொரோனாவின் தாக்கம் இன்னும் இருப்பதால் தனி விமானம் மூலம் செல்ல முடிவு செய்திருக்கிறாராம்.

முன்னதாக அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ளக்கூட தனி விமானம் மூலம் தான் ஹைதராபாத் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த டிசம்பர் மாதம் ரஜினிக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்சனை ஏற்பட்டு ஹைதராபாத்தில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் பிறகு வீடு திரும்பிய அவர் ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்நிலையில் தான் அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா கிளம்பவிருக்கிறார்.

ரஜினி நடித்திருக்கும் அண்ணாத்த படத்தின் 10 சதவீத காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியிருக்கிறது. குஷ்பு, மீனா, நயன்தாரா தொடர்பான காட்சிகளை விரைவில் ஷூட் செய்யவிருக்கிறார்கள். படத்தை தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக நவம்பர் மாதம் 4ம் தேதி ரிலீஸ் செய்கிறார்கள்.

நயன்தாராவுக்கு என்னால் தான் வாழ்க்கை கிடைச்சிருக்கு: சுசித்ராவின் மாஜி கணவர்