ஹைலைட்ஸ்:

  • விஜய் தேவரகொண்டாவை பாராட்டிய ராம் கோபால் வர்மா
  • லைகர் படக்காட்சிகளை பார்த்த ராம் கோபால் வர்மா

புரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே நடித்திருக்கும் படம் லைகர். அந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 9ம் தேதி தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் லைகர் படத்தின் சில காட்சிகளை பார்த்திருக்கிறார் இயக்குநர் ராம் கோபால் வர்மா. அது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
புரி ஜெகன்நாத் இயக்கத்தில், சார்மி தயாரிப்பில் உருவாகியிருக்கும் லைரின் சில காட்சிகளை பார்த்தேன். சிங்கமும், புலியும் சேர்ந்தது தான் இந்த லைகர். பவன் கல்யாண், மகேஷ் பாபு, ரவி தேஜா மற்றும் டைகர் ஷ்ராஃபின் கலவையாக இருக்கிறார் விஜய் தேவரகொண்டா.

Liger

லைகரில் விஜய் தேவரகொண்டாவின் ஸ்கிரீன் பிரசன்ஸ் கடந்த 20 ஆண்டுகளில் நான் வேறு எந்த நடிகரிடமும் பார்க்கவில்லை. இந்த படத்தை கொடுப்பதற்காக புரி ஜெகன்நாத், சார்மிக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
ராம் கோபால் வர்மாவின் ட்வீட்டை பார்த்த சமூக வலைதளவாசிகளோ, வழக்கமாக யாரையாவது விமர்சித்து தானே ட்வீட் போடுவீர்கள். இது என்ன விஜய் தேவரகொண்டாவை இந்த அளவுக்கு புகழ்ந்து தள்ளியிருக்கிறீர்கள்?. இதில் ஏதோ உள்குத்து இருப்பது போன்று தெரிகிறதே என தெரிவித்துள்ளனர்.

லைகர் படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் ரிலீஸாகவிருக்கிறது. லைகர் தியேட்டரில் அல்லாமல் ஓடிடியில் வெளியாகப் போகிறது, படத்தை ரூ. 200 கோடிக்கு விற்றுவிட்டார்கள் என்று பேச்சு கிளம்பியது. இது குறித்து அறிந்த விஜய் தேவரகொண்டாவோ, ரூ. 200 கோடி ரொம்ப குறைவும், தியேட்டர்களில் மேலும் வசூல் செய்யும் என்று ட்வீட் செய்தார்.

லைகர் படத்தில் பாக்ஸராக நடித்துள்ளார் விஜய் தேவரகொண்டா. டீஸரை விஜய்யின் பிறந்தநாளான மே 9ம் தேதி வெளியிட திட்டமிட்டார்கள். ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனையால் வெளியிடவில்லை.
பண்ணை வீட்டில் இரவில் ‘ஸ்பெஷல்’ பார்ட்டி: சூப்பர் ஹிட் பட நடிகை கைது