கடந்த 2019 ஆண்டு சசி இயக்கத்தில் வெளியான ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் சித்தார்த் மனைவியாக, ஜிவி பிரகாஷ் மனைவியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர்லிஜோமோல் ஜோஸ். பிரபல நடிகையான இவர் திடீர் திருமணம் செய்து கொண்டார்.

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் லிஜோமோல் ஜோஸ். தமிழில் சசி இயக்கத்தில் வெளியான ‘சிவப்பு மஞ்சள் பிச்சை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் மனைவியாகவும், சகோதரியாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து ‘தீதும் நன்றும்’ என்ற படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்தார். மற்றொரு நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்தார். சூர்யா நடிப்ப்பில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள ‘ஜெய் பீம்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

உனக்கு நண்பனாக, கணவனாக இருப்பது பெருமை ஜோ: சூர்யா நெகிழ்ச்சி!

தா.செ.ஞானவேல் என்பவர் இயக்கத்தில் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள ‘ஜெய் பீம்’ படம் வரும் நவம்பர் 2-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்தப்படத்தின் கதை லிஜோமோல் ஜோஸ் கதாபாத்திரத்தைச் சுற்றியே அமைக்கப்பட்டுள்ளது. ‘ஜெய் பீம்’ படத்தில் இருளர், பழங்குடியினருக்காக போராடும் வழக்கறிஞர் வேடத்தில் சூர்யா நடித்துள்ளார்.

இந்நிலையில் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்த லிஜோமோல் ஜோஸ் திடீரென்று திருமணம் செய்துகொண்டார். இவரது கணவர் பெயர் அருண் ஆண்டனி. இவர்களுடைய திருமணம் கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி கேரளாவில் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்றுள்ளது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். இவர்களின் திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து, பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முகில் படம் டீசர்: என்ன கதைகளமாக இருக்கும்! ஒரு அலசல்!