வாரிசு நடிகையாக இருந்தும் சோனம் கபூரை பாலிவுட்டில் இருக்கும் சில ஆண்கள் சீண்டிப் பார்த்திருக்கிறார்கள்.

சோனம் கபூர்

பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மூத்த மகளான சோனம் தன் தந்தை வழியில் நடிக்க வந்துவிட்டார். அவர் நடிக்க வந்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதையடுத்து தன் தங்கை ரியா கபூருடன் சேர்ந்து கிளப்ஹவுஸ் செஷனில் வந்தார் சோனம் கபூர். அப்பொழுது அவர் சொன்ன விஷயம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

ஆண்கள்

சோனம் கபூர் நடித்த ஆயிஷா படம் மூலம் ரியா தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார். அந்த படத்தை எடுத்தபோது பாலிவுட்டில் இருக்கும் சில ஆண்கள் தங்களை கொடுமைப்படுத்தியதாக சோனம் கபூர் தெரிவித்துள்ளார். ஆனால் தானும், தங்கை ரியாவும் ஒற்றுமையாக இருந்து அவர்களை எதிர்கொண்டதாக சோனம் மேலும் கூறியுள்ளார்.

ரியா கபூர்

சோனம் கபூர் கூறியதாவது, என் தங்கை ரியா எனக்கு பெரும் பலம். நாம் ஒற்றுமையாக இருந்தால் அது தான் பலம். எதையும் எளிதில் எதிர்கொள்ளலாம். என் தங்கை தான் என் தோழி என்பது எனக்கு எப்பொழுதுமே தெரியும் என்றார். வாரிசாக இருந்தும் சோனம் கபூரை யார் கொடுமைப்படுத்தியது என்று ரசிகர்கள் வியக்கிறார்கள்.

லண்டன்

தொழில் அதிபர் ஆனந்த் அஹுஜாவை திருமணம் செய்து கொண்ட சோனம் கபூர் லண்டனில் வசித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகும் அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். மும்பைக்கும், லண்டனுக்குமாக பயணம் செய்து கொண்டிருக்கிறார். அவர் தற்போது சோமே மகீஜா இயக்கத்தில் ‘Blind’ படத்தில் நடித்து வருகிறார்.