ஹைலைட்ஸ்:

  • சினேகன், கன்னிகாவை வாழ்த்திய கமல்
  • சினேகன் திருமணம் தாமதமானதற்கு நானும் காரணம்- கமல்

பாடலாசிரியரும், நடிகருமான சினேகனுக்கும், நடிகை கன்னிகா ரவிகுக்கும் உலக நாயகன் கமல் ஹாசன் முன்னிலையில் திருமணம் நடந்தது. கமல் தாலியை எடுத்துக் கொடுக்க அதை கன்னிகா கழுத்தில் கட்டினார் சினேகன்.

கமல் முன்னிலையில் கன்னிகா ரவியை மணந்த சினேகன்மணமக்களை வாழ்த்தி பேசிய கமல் ஹாசன் கூறியதாவது,

சினேகனை திருமணம் செய்து கொள்ள ஒரு வருடமாக கனா கண்டு கொண்டிருந்தார் கன்னிகா. அது தாமதப்பட்டதற்கு காரணம் மாப்பிள்ளை மட்டும் அல்ல நானும் தான். நான் இன்னும் ஒரு வருஷம் லேட் பண்ணியிருந்தால் அவர் பாடு பயங்கரமாகியிருந்திருக்கும்.

ஓடிப் போய் கல்யாணம் தான் கட்டிக்கலாமா இல்லை கல்யாணம் கட்டிக்கிட்டு ஓடிப்போகலாமா என்கிற நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்பார்கள். நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது இன்னொரு உயிர்தானடி என்கிற என் பாடல் வரியை சொல்லி வாழ்த்துகிறேன். அந்த உயிர் உங்கள் வாழ்க்கையில் விரைவில் வர வேண்டும் என்பது தான் என்னுடைய வாழ்த்து.

இந்த திருமணத்தின் பொருளும், நம்ம பாப்புலேஷனின் அர்த்தமும் அது தான். 16 என்பது பிள்ளைகளின் கணக்கு அல்ல. வேறு சில சௌகர்யங்களின் கணக்கு. அளவோடு பெற்றுக் கொண்டு அவர்களை நன்றாக படிக்க வைத்து, அவர்களை இந்த நிலையில் நீங்கள் பார்த்து சந்தோஷப்பட வேண்டும் என்பது தான் என்னுடைய வாழ்த்து என்றார்.

கமல் பேசிய வீடியோவை பார்த்தவர்களோ, ஆண்டவரே உங்கள் உடம்புக்கு ஒன்றும் இல்லையே. வீடியோவில் குரல் ஒரு மாதிரியாக இருக்கிறதே என்று அக்கறையுடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.