ஹைலைட்ஸ்:

  • விக்ரமின் சீயான் 60 படத்தில் நடிக்கும் வாணி போஜன்
  • பெரிய திரைக்கு வந்ததற்கான காரணத்தை சொன்ன வாணி போஜன்

தெய்வமகள் தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் வாணி போஜன். சின்னத்திரையில் கலக்கி வந்த வாணி போஜன் ஒரு சுபயோக சுபதினத்தில் பெரிய திரைக்கு வந்துவிட்டார். அசோக் செல்வன், ரித்திகா சிங், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான ஓ மை கடவுளே மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் வாணி போஜன்.

கை நிறைய படங்கள் வைத்திருக்கும் வாணி போஜன், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் சீயான் 60 படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். அந்த படத்தின் 50 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இது தவிர்த்து சூர்யா தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார்.

கொரோனா வைரஸ் பிரச்சனையால் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு வாணி போஜன் பதில் அளித்தார்.

அப்பொழுது ஒருவரோ, சின்னத்திரையில் இருந்து பெரியதிரைக்கு ஏன் வந்தீர்கள் என்று கேட்டார். அதற்கு வாணி போஜனோ, சீரியல்களில் ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் தான் நடிக்க முடியும். ஆனால் படங்களில் அப்படி இல்லை. வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கலாம். அந்த ஆசையில் தான் பெரிய திரைக்கு வந்தேன் என்றார்.

பெரியதிரையில் வெற்றி பெற கவர்ச்சி முக்கியமா இல்லை திறமை முக்கியமா என்று ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு வாணியோ, கவர்ச்சி முக்கியம் தான் என்றாலும் திறமை தான் மிகவும் முக்கியம். திறமை இருந்தால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும் என்றார்.

பெரிய திரைக்கு வந்தாலும் ஆள் மாறிவிடாமல் அப்படியே இருக்கிறீர்கள். இந்த குணத்திற்காகவே நீங்கள் பெரிய ஆளாவீர்கள் என்று ரசிகர்கள் வாணி போஜனை வாழ்த்தியுள்ளனர்.

நயன்தாராவுக்கு என்னால் தான் வாழ்க்கை கிடைச்சிருக்கு: சுசித்ராவின் மாஜி கணவர்