‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்திலிருந்து தொடங்கிய பிரச்சனைகள் சிம்புவை இன்றுவரை விடாமல் துரத்தி வருகின்றன. அந்த வகையில் அண்மையில் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் தொடங்கிய ‘வெந்து தணிந்தது காடு‘ படத்தின் படப்பிடிப்பும் சிக்கலை சந்தித்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தன்மீது சிம்புவின் தாயார் உஷா ராஜேந்திரா சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ளார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.

‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ பட விவகாரம் தொடர்பாக அண்மையில் வீடியோ ஒன்றில் பேசிய சிம்புவின் தாயார் உஷா டி.ராஜேந்தர், அதில், ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டார் சிலம்பரசன். அவருக்குக் கொடுக்க வேண்டிய சம்பளத்தை, பட வெளியீட்டுக்கு முன்பு கொடுக்கிறேன் என்று சொன்ன மைக்கேல் ராயப்பன் கொடுக்கவில்லை. எனது மீதி சம்பளத்தைக் கொடுத்துவிட்டுத் தான் படத்தை வெளியிட வேண்டும் என்று நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார் சிலம்பரசன். பட வெளியீட்டுக்கு முந்தைய நாள் சிலம்பரசனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை விட்டுக் கொடுத்தால் மட்டுமே, படம் நாளை வெளியாகும் என்றார் மைக்கேல் ராயப்பன்.

சிலம்பரசனும் பணமே வரவிட்டாலும் பரவாயில்லை என்றாலும், படத்தைத் தயாரிப்பாளர் வெளியிடட்டும் என்று சொல்லிவிட்டார் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் உஷா ராஜேந்தர் குற்றச்சாட்டுக்கு தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த மைக்கேல் ராயப்பன், ‘AAA’ படம் தவிர சிம்பு இன்னொரு படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் போட கேட்டுக் கொண்டேன். அதற்காகத்தான் 75 லட்சம் தருவதாக கூறினேன். அவருக்கு தந்ததில் ஒரு செக் பவுன்ஸானது.

ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்திற்கு போட்டியாக வெளியாகும் அஜித்தின் ‘வலிமை’!
அந்தத் தொகையை மறுநாளே டிடி எடுத்து தந்துவிட்டேன். ஆனால், சிம்பு இன்னும் அந்த செக்கை திருப்பித் தராமல் வைத்துள்ளார் என்று புதிதாக ஒரு குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்துள்ளார் தயாரிப்பாளர் மைக்கேல் ராய்ப்பன். அவரின் இந்த புதிய குற்றச்சாட்டிற்கு சிம்பு தரப்பில் இருந்து என்ன மாதிரியான பதில் வர போகிறது என்பதை அறிய கோலிவுட் சினிமாவே ஆவலுடன் காத்திருக்கிறது.

சிம்பு தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். வேல்ஸ் பிலிம்ஸ் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்து வரும் இந்த படத்திற்காக 15 கிலோ எடையை குறைத்து நடிக்கிறார் சிம்பு. இந்த படத்தில் அவரின் அம்மாவாக ராதிகா சரத்குமார் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூரில் தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.