மாநாடு பட விழாவில் சிம்பு அழுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

மாநாடு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் மாநாடு படம் நவம்பர் 25ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் சென்னையில் நடந்த மாநாடு ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார் சிம்பு. மாநாடு, படக்குழு பற்றி சந்தோஷமாக சிரித்து பேசினார் சிம்பு. திடீர் என்று எமோஷனலாகி அழுதுவிட்டார்.

Twitter-Actor Kayal Devaraj

சிம்பு

விழா மேடையில் சிம்பு இப்படி அழுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. நிறைய பிரச்சனை கொடுக்கிறாங்க. பிரச்சனைகளை எல்லாம் நான் பார்த்துக்கிறேன். என்னை மட்டும் நீங்க பார்த்துக்கோங்க என்று ரசிகர்களிடம் கூறி கண் கலங்கினார் சிம்பு.

ரசிகர்கள்

சிம்பு அழுததை பார்த்த ரசிகர்களும் ஃபீல் செய்துவிட்டார்கள். தலைவா, உங்களுக்கு நாங்க இருக்கிறோம், அழாதீர்கள் என்று ரசிகர்கள் தைரியம் சொல்லியிருக்கிறார்கள். தன் படம் என்றாலே பிரச்சனை வருவது வழக்கமாகிவிட்டது என்றார் சிம்பு. அதை எல்லாம் தாண்டி தான் சுரேஷ் காமாட்சி மாநாடு படத்தை தயாரித்ததாக சிம்பு கூறினார்.

ட்ரெய்லர்

மாநாடு பட விழாவில் ட்ரெய்லரை வெளியிட்டனர். மாலையில் ஆன்லைனில் ட்ரெய்லரை வெளியிட முடிவு செய்தார்கள். ஆனால் நிகழ்ச்சிக்கு வந்த ரசிகர்களில் ஒருவர், அங்கு திரையிடப்பட்ட ட்ரெய்லரை தன் செல்போனில் வீடியோ எடுத்து ஆன்லைனில் கசியவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.