5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் பேர்ல் வி பூரி கைது செய்யப்பட்டுள்ளது குறித்து நடிகை திவ்யா கோஸ்லா குமார் தெரிவித்திருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

பேர்ல் வி பூரி

கடந்த 2019ம் ஆண்டு 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக நாகினி 3 தொடர் புகழ் நடிகர் பேர்ல் வி பூரியை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். பேர்ல் அப்படிப்பட்ட ஆளே இல்லை என்று நடிகைகள் அனிதா ஹசநந்தனி, யாஷிகா ஆனந்த், தயாரிப்பாளர் ஏக்தா கபூர் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடிகையும், தயாரிப்பாளருமான திவ்யா கோஸ்லா குமார் இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது, அந்த சிறுமியின் தந்தை அனில், தாய் ஏக்தா சர்மா ஒரு நடிகை. பாலாஜி டெலிஃபிலிம்ஸ் தயாரித்த பேபனா பியார் சீரியல் செட்டில் தன் 5 வயது மகளை பேர்ல் வி பூரி பலாத்காரம் செய்ததாக ஆனந்த் புகார் அளித்தார் என்றார்.

திவ்யா

மகளை யார் கவனிப்பது என்பது குறித்து அனில், ஏக்தா இடையே பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது. மகள் கடந்த 2 ஆண்டுகளாக அனிலுடன் இருக்கிறார். ஏக்தா ஒரு நடிகை என்றும், அவர் நடித்த சீரியல் செட்டில் ஹீரோ தங்கள் மகளை சீரழித்ததாகவும், அதனால் தாயுடன் இருப்பது பாதுகாப்பு இல்லை என்றும் அனில் தெரிவித்துள்ளார். இந்த சீனுக்காக அனிலுக்கு சிறந்த திரைக்கதைக்கான பிலிம்ஃபேர் விருது கொடுக்க வேண்டும் என்று திவ்யா கோஸ்லா குமார் தெரிவித்துள்ளார்.

எஃப்.ஐ.ஆர்.

தற்போது போலீசார் பேர்லை கைது செய்துள்ளனர். 2019ம் ஆண்டு புகார் அளித்தபோதே ஏன் அவரை கைது செய்யவில்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எஃப்.ஐ.ஆரில் தன் தாயுடன் இருக்கும்போது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் பேர்லின் பெயர் இல்லை. தன் கணவர் தன்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தவதாக ஏக்தா சர்மா ஏக்தா கபூரிடம் செல்போனில் தெரிவித்துள்ளார். செட்டில் எதுவும் நடக்கவில்லை என்பதை ஏக்தா சர்மா தெளிவுபடுத்தியிருக்கிறார் என திவ்யா மேலும் கூறியுள்ளார்.

புகார்

செட்டில் எதுவும் நடக்கவில்லை என்று குழந்தையை கவனிக்கும் பெண்ணும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அப்பொழுது அந்த குழந்தைக்கு 5 வயது தான். 10 நாட்கள் கழித்து அனில் அந்த குழந்தையை கடத்திச் சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தந்தையோ, குழந்தையோ பேர்லின் பெயரை கூறவில்லை. தன் மகளை அனில் கொடுமைப்படுத்துவதாக ஏக்தா சர்மா ஏக்தா கபூரிடம் கூறியுள்ளார். பேர்லின் கெரியர் சரியாக துவங்கும் முன்பே அவருக்கு இப்படி ஒரு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இனி அவருக்கு யார் வாய்ப்பு கொடுப்பார்கள் என்று கேட்கிறார் திவ்யா.

கர்மா

தன் சுயலாபத்திற்காக மகளையே பயன்படுத்தி அடுத்தவரின் வாழ்க்கையை நாசம் செய்வதற்காக அனில் வெட்கப்பட வேண்டும். மீடியா முன்பு வந்து உண்மையை சொல்லாமல் இருப்பதற்காக ஏக்தா சர்மா வெட்கப்பட வேண்டும். கர்மா இல்லை என்று நினைக்கிறீர்களா?. அனைவரும் #istandwithpearl என்கிற ஹேஷ்டேகை பயன்படுத்தி பேர்ல் வி பூரிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நான் பேர்லுடன் வேலை செய்திருக்கிறேன். அவர் பெண்களை எப்படி மதிப்பார் என்பதை பார்த்திருக்கிறேன். காஸ்டியூம், டான்ஸ் என்று அனைத்து துறைகளிலும் பெண்கள் இருக்கிறார்கள். ஏன் எங்களின் இயக்குநரே ஒரு பெண். யாராவது பேர்ல் மீது புகார் தெரிவித்தார்களா, இல்லையே. ஏனென்றால் அவர் நல்லவர். உண்மை வெல்லட்டும் என்கிறார் திவ்யா கோஸ்லா குமார்.