சிறையில் இருக்கும் ஆர்யன் கான் பிஸ்கட் மற்றும் தண்ணீரில் தான் வாழ்கிறாராம்.

ஆர்யன் கான்

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் அக்டோபர் 2ம் தேதி சொகுசு கப்பலில் நடந்த போதை பார்ட்டியில் கலந்து கொண்டபோது போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் சிக்கினார். 7 மணிநேர விசாரணைக்கு பிறகு அக்டோபர் 3ம் தேதி கைது செய்யப்பட்ட ஆர்யன் கான் மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

உணவு

ஆர்யன் கானுக்கு வீட்டில் இருந்து உணவு அனுப்ப அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து சிறை உணவு சாப்பிட மறுத்துவிட்டாராம் ஆர்யன். சிறையில் இருக்கும் கேன்டீனில் பிஸ்கட் வாங்கி சாப்பிடுகிறாராம். பிஸ்கட் மற்றும் தண்ணீரில் தான் நாட்களை கடத்துகிறாராம்.

நீதிமன்றம்

ஆர்யன் மட்டும் அல்ல அவருடன் சேர்ந்து கை செய்யப்பட்ட நண்பர்களும் சிறை உணவை சாப்பிடாமல் இருக்கிறார்களாம். நீதிமன்றம் அனுமதி அளிக்கும் வரை ஆர்யனால் வீட்டு உணவை பெற முடியாது. இதற்கிடையே ஆர்யன் சிறையில் இருப்பதை நினைத்து ஷாருக்கானும், கௌரியும் தூக்கமில்லாமல் தவிக்கிறார்களாம்.

ஆதரவு

ஷாருக்கானால் தான் ஆர்யனை டார்கெட் செய்வதாக பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார். ஆர்யன் கானுக்கு ரித்திக் ரோஷன் உள்பட பல பாலிவுட் பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கிடையே ஷாருக்கான் முஸ்லீம் என்பதால் தான் அவரின் மகனை கைது செய்துள்ளனர் என்று பேச்சு கிளம்பியிருக்கிறது. ஆனால் அப்படி பேசுவது சரியில்லை என்கிறார் சத்ருகன் சின்ஹா.