ஹைலைட்ஸ்:

  • டான் படக்குழுவுக்கு அபராதம்
  • சிவகார்த்திகேயன் பட இயக்குநர் உள்பட 17 பேர் மீது வழக்கு

புதுமுகம் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் டான். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் செல்லக்குட்டியான அனிருத் இசையமைக்கிறார்.

படத்தில் நடிப்பதுடன் லைகா நிறுவனத்துடன் சேர்ந்து தயாரிக்கவும் செய்கிறார் சிவகார்த்திகேயன். சூரி, சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, காளி வெங்கட், பால சரவணன், குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் சிவாங்கி, காளி வெங்கட், மிர்ச்சி விஜய் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.

பொள்ளாச்சி ஆனைமலை அருகே டான் படப்பிடிப்பு நடந்தது. அப்பொழுது சிவகார்த்திகேயனை பார்க்க ஏராளமானோர் கூடிவிட்டனர். சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், மாஸ்க் அணியாமலும் மக்கள் நின்றார்கள்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் அங்கு வந்தனர். விசாரணையில் அனுமதி பெறாமல் அப்பகுதியில் படப்பிடிப்பை நடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து படக்குழுவுக்கு ரூ. 19 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி உள்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

என்னது, காதல் கணவரை பிரிகிறாரா சமந்தா?