நெல்சன் திலீப் குமார் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்கியுள்ள படம் ‘டாக்டர்’ வரும் அக்டோபர் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப்படத்தில் பிரியங்கா மோகன் யோகிபாபு, வினய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் உடன் இணைந்து, சிவகார்த்திகேயனின் சொந்த நிறுவனமான எஸ்.கே.புரொடக்‌ஷன் ‘டாக்டர்’ படத்தை தயாரித்துள்ளது.

இந்தப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. அப்போது பேசிய சிவகார்த்திகேயன், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் 2-வது பாகம் குறித்து சும்மா பேசினோம். ஆனால், அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். அது ஒரு எபிக் படம். நாங்கள் எங்களையே அறியாமல் ஜாலியாக எடுத்த படம். அதைத் திரும்ப எடுக்கவே முடியாது. ‘ரெமோ’ படத்தைத் தொடர முடியாது. ஆனால், அந்த நர்ஸ் கதாபாத்திரத்தை வைத்து வேண்டுமானால் வேறொரு படம் எடுக்கலாம் என தெரிவித்திருந்தார்.

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், சூரி, ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்த படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. கடந்த 2013-ம் ஆண்டு வெளியான இப்படம் மெஹா ஹிட்டடித்தது. இந்தப்படத்தின் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பல்வேறு யுகங்கள் கிளம்பிய நிலையில் சிவகார்த்திகேயன் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கு வாய்ப்பே இல்லை என தெரிவித்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஹாய் செல்லம்.. 12 வருடங்களுக்கு பிறகு விஜய்யை டார்ச்சர் செய்ய போகும் பிரபல நடிகர்!இதன் இரண்டாம் பாகம் குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் பொன்ராம். ’வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’ வருவது உறுதி. சிவகார்த்திகேயன் சார் மெச்சூரிட்டி ஆகிவிட்டார். அடுத்து வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களை வைத்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’ எடுப்போம் என தெரிவித்துள்ளார்.

பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார், சத்யராஜ் நடித்திருக்கும் எம்ஜிஆர் மகன் படம் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு படத்தை பொன்ராம் இயக்கி வருகிறார். இதனையடுத்து அவர் வருத்தப்படாத ‘வாலிபர் சங்கம் 2’ பாகத்தை இயக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இளையராஜா இளையராஜா தான் – அனு மோகன் பெருமிதம்!