நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்று. நடிப்புக்கு இலக்கணமாக தற்போதும் போற்றப்படும் அவரை பற்றி சினிமா துறை பிரபலங்கள் பலரும் இன்று பேசி இருக்கிறார்கள்.

உலகநாயகன் கமல்ஹாசன் சின்ன வயதில் சிவாஜி உடன் இருக்கும் போட்டோ ஒன்றை பதிவிட்டு அவரை பற்றி பேசி இருக்கிறார்.

“திரை நடிப்புக்கென்று ஒரு மைல் கல்லை நிர்ணயித்துச் சென்றிருக்கும் கலைஞர் சிவாஜி கணேசனின் நினைவு நாள் இன்று. ஏதோ ஒரு திரையில் படம் என ஒன்று சலனமுறும் காலம்வரை நடிகர் திலகத்தின் நினைவு தமிழர் நெஞ்சில் அலையடித்தபடியே இருக்கும்” என கமல் பதிவிட்டு உள்ளார்

இந்த புகைப்படம் பற்றி ட்விட்டரில் பேசி இருக்கும் ராதிகா சரத்குமார் ‘இது தான் இன்றைய கியூட்டான புகைப்படம். சிறந்த நடிகரும் முன்னோடியுமான நடிகர் திலகத்தை நினைவு கொள்கிறேன். ஒரே ப்ரேமில் இரண்டு சிறந்த நடிகர்கள்’ என குறிப்பிட்டு இருக்கிறார்.