‘தென்மேற்கு பருவக்காற்று’ தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சீனுராமசாமி. தனது முதல் திரைப்படத்திலே தேசிய விருதும் பெற்றார். இவரின் இயக்கத்தில் இடம் பொருள் ஏவல், மாமனிதன் உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வெளியீட்டிற்கு காத்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சீனுராமசாமியின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.

நீர்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்களின் மூலம் எதார்த்த இயக்குனராக தமிழ் சினிமா ரசிகர்களால் அறியப்படுபவர் இயக்குனர் சீனுராமசாமி. இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இடம் பொருள் ஏவல்’ நீண்ட காலமாக வெளியீட்டிற்கு காத்து கொண்டிருக்கின்றன. அதனை தொடர்ந்து யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில் மாமனிதன் திரைப்படத்தை இயக்கி உள்ளார்.

இந்நிலையில் தற்போது தனது அடுத்த திரைப்படத்திற்கான வேலைகளில் இறங்கி உள்ளார் சீனுராமசாமி. இந்தப்படத்தில் ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மதுரை மற்றும் அதைச்சுற்றியுள்ள நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு இந்தப்படம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

ஐந்து முன்னணி கதாநாயகிகள் இணையும் கருங்காப்பியம்: இணையத்தில் வைரலாகும் பர்ஸ்ட் லுக்!
ஜிவி பிரகாஷ் படத்தை முடித்துவிட்டு மீண்டும் விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு படத்தை சீனு ராமசாமி இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கவுள்ளார். ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் ஏற்கனவே ஜெயில், ஐங்கரன், பேச்சுலர் உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி ரிலீசுக்காக காத்து கொண்டிருக்கின்றன. இதுதவிர மேலும் சில திரைப்படங்கள் ஜிவி பிரகாஷ் கைவசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.