ஹைலைட்ஸ்:

  • சீயான் 60 அப்டேட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்
  • விக்ரம், த்ருவ் சேர்ந்து நடிக்கும் சீயான் 60
  • 50 சதவீத காட்சிகளை படமாக்கி முடித்த கார்த்திக் சுப்புராஜ்

ஜகமே தந்திரம் படத்தை அடுத்து விக்ரமை வைத்து படம் இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்புராஜ். தற்போதைக்கு சீயான் 60 என்று அழைக்கப்படும் அந்த படத்தில் விக்ரமின் மகன் த்ருவ், வாணி போஜன், சிம்ரன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

ஆக்ஷன் த்ரில்லரான சீயான் 60 படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது. தனுஷை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் ஜகமே தந்திரம் படம் வரும் 18ம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் ரிலீஸாகவிருக்கிறது.

அந்த படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் என்ன ட்வீட் போட்டாலும், சீயான் 60 பற்றி ஏதாவது அப்டேட் கொடுங்களேன் என்று விக்ரம் ரசிகர்கள் கேட்டு வந்தார்கள். இந்நிலையில் முதல் முறையாக சீயான் 60 பற்றி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

அவர் கூறியிருப்பதாவது,

சீயான் 60 படத்தின் 50 சதவீத ஷூட்டிங் முடிந்துவிட்டது. தமிழகத்தில் லாக்டவுன் முடிந்த பிறகு மீண்டும் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டிருக்கிறேன் என்றார்.

சத்தமே இல்லாமல் பாதி படத்தை முடித்துவிட்டாரே இந்த கார்த்திக் சுப்புராஜ் என்று விக்ரம் ரசிகர்கள் வியக்கிறார்கள். விக்ரம், வாணி போஜன் தொடர்பான காட்சிகள் விரைவில் படமாக்கப்படவிருக்கிறதாம்.

படத்தில் சிம்ரனும் இருக்கிறார், வாணி போஜனும் இருக்கிறார் என்று தகவல் வெளியானதும் ரசிகர்கள் பதறிவிட்டார்கள். சீனியரான வாணி போஜனை போய் த்ருவுக்கு ஜோடியாக நடிக்க வைக்கிறாரா கார்த்திக் சுப்புராஜ் என்று கேள்வி எழுப்பினார்கள்.

வாணி போஜன் த்ருவுக்கு அல்ல மாறாக அவரின் அப்பாவுக்கு தான் ஜோடியாம். சீயான் 60 படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக இருந்தது. ஆனால் அவருக்கு பதில் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவிருக்கிறார்.

அப்பாவும், மகனும் முதல் முறையாக சேர்ந்து நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை கார்த்திக் சுப்புராஜ் நிச்சயம் பூர்த்தி செய்வார் என்று நம்பப்படுகிறது.

செய்யவே கூடாது என்று இருந்த காரியத்தை செய்ய வைத்துவிட்டார் கார்த்திக்: தனுஷ்