ஹைலைட்ஸ்:

  • ஜூன் 18ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம்.
  • நேற்று ‘ஜகமே தந்திரம்’ திரைப்படத்தின் ஒட்டுமொத்த பாடல்கள் வெளியாகின.
  • ரசிகர்களின் கேள்விகளுக்கு ட்விட்டர் ஸ்பேஸில் பதிலளித்த நடிகர் தனுஷ்.

பேட்ட திரைப்படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்குவெறித்தனமாக காத்திருக்கின்றனர் ரசிகர்கள். ஓடிடி தளமான நெட்பிளிக்சில் வருகின்ற ஜூன் 18ஆம் தேதி வெளியாகிறது இந்த திரைப்படம். இந்நிலையில் சமூக வலைத்தளமான ட்விட்டரில் பிரபலமாகி வரும் ஸ்பேஸ் உரையாடல் நிகழ்ச்சியில் ஜகமே தந்திரம் திரைப்படம் தொடர்பான கேள்விகளுக்கு ரசிகர்களிடம் பதிலளித்துள்ளார் தனுஷ்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தை , ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே நிறைவடைந்தது. கொரனோ ஊரடங்கு காரணமாக படம் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் முழுமையான பாடல்கள் வெளியிடப்பட்டன. இசை வெளியீட்டை முன்னிட்டு, நேற்று இரவு 8:30 மணியளவில் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் இசைக் குழுவினர் ட்விட்டர் ஸ்பேஸில் கலந்துரையாடினார்கள். இதனை அலெக்சாண்டர் பாபு தொகுத்து வழங்கினார். இதில் நடிகர் தனுஷும் கலந்துகொண்டு ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

ஜூலை வரைக்கும் வெயிட் பண்ணுங்க ப்ளிஸ்.. சூர்யா ரசிகர்களிடம் கெஞ்சும் இயக்குனர் பாண்டியராஜ்!
அப்போது அவரிடம் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம்படம் குறித்தும், அவர் ஏற்று நடித்துள்ள சுருளி கதாபாத்திரம் குறித்தும் ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு தனுஷ், ‘ஜகமே தந்திரம்’ படம் மற்றும் பாடல்கள் வெளியீட்டுக்காக நீண்ட நாட்களாகக் காத்திருந்தேன். சிறந்த சூழலில் இந்தப் படம் வெளியாகியிருக்க வேண்டும் என நினைக்கிறேன். இது போன்ற மகிழ்ச்சியற்ற காலகட்டத்தில் மக்களுக்கு சில பொழுதுபோக்கு மற்றும் மகிழ்ச்சியை கொடுக்கும் என்று நம்புகிறேன்

எனது திரையுலக வாழ்க்கையில் சுருளி எனக்குப் பிடித்த கதாபாத்திரங்களில் ஒன்று. கார்த்திக் சுப்புராஜிடம் இந்தப் படத்தின் 2-ம் பாகம் எழுதுமாறு கேட்டுள்ளேன். அந்தளவுக்கு எனக்கு இந்தக் கதாபாத்திரம் மிகவும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார். இதனால் ஜகமே தந்திரம் திரைப்படத்தில் தனுஷின் கதாபாத்திரம் வெயிட்டாக இருக்கும் என எதிர்பார்க்கின்றனர் தனுஷ் ரசிகர்கள்.