ஹைலைட்ஸ்:

  • சூப்பர் மார்க்கெட்டில் காதலருக்கு முத்தம் கொடுத்த ஸ்ருதி
  • ஸ்ருதி ஹாசனை விளாசும் நெட்டிசன்கள்

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் கவனம் செலுத்தி வரும் ஸ்ருதி ஹாசன், டெல்லியை சேர்ந்த டூடுல் கலைஞரான சாந்தனு ஹசாரிகாவை காதலித்து வருகிறார். மும்பையில் இருக்கும் வீட்டில் ஸ்ருதியுடன் சேர்ந்து வசித்து வருகிறார் சாந்தனு.

முதல் முறை லாக்டவுன் அமல்படுத்தப்பட்டபோது மும்பையில் தனியாக சிக்கிவிட்டதாக கூறினார் ஸ்ருதி. ஆனால் இரண்டாவது லாக்டவுனின்போது துணைக்கு சாந்தனு இருப்பதால் நன்றாக இருக்கிறது என்றார். வீட்டில் இருக்கும் நேரத்தில் வகை, வகையாக சமைத்து சாந்தனுவை அசத்திக் கொண்டிருக்கிறார் ஸ்ருதி.

தான் சாந்தனுவுடன் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து வருகிறார். இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் தன் தோழி அம்ரிதா ராம் மற்றும் சாந்தனுவுடன் மும்பையில் இருக்கும் சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்கு சென்றிருக்கிறார்.

அங்கு ஸ்ருதி தன் காதலரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க அதை தோழி புகைப்படம் எடுத்திருக்கிறார். மேலும் தன் தோழிக்கும் முத்தம் கொடுத்து புகைப்படம் எடுத்திருக்கிறார் ஸ்ருதி. அந்த இரண்டு புகைப்படங்களையும் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

shruti haasan

அதை பார்த்த ரசிகர்களோ, இந்த காதலாவது திருமணம் வரை வர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மற்றவர்களோ, அது ஏன் முத்தம் கொடுக்கும் போது ஒத்த காலை தூக்கிக்கிட்டு நிற்கிறீர்கள். பொது இடத்தில் இப்படித் தான் நடந்து கொள்வதா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

முன்னதாக சாந்தனுவுக்கு சிக்கென் ஊட்டிவிட்டபோது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டார் ஸ்ருதி. அதை பார்த்தவர்களோ, நீங்கள் சைவம், sea food தானே சாப்பிடுவீர்கள் என்றீர்கள். தற்போது சிக்கனுக்கு மாறிவிட்டீர்களா, தப்பில்ல தப்பில்ல ஸ்ருதி என்று தெரிவித்தனர்.

ஸ்ருதி தற்போது வெப்தொடர் ஒன்றில் நடித்து வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிரபாஸின் சலார் படப்பிடிப்பில் விரைவில் கலந்து கொள்கிறார்.

மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனின் லாபம் படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்திருக்கிறார் ஸ்ருதி. அந்த படத்தின் ரிலீஸை தான் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
பிறந்தமேனியாக போட்டோ வெளியிட்ட அம்மன் சீரியல் நடிகை