சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியான திரைப்படம் ‘சூரரைப் போற்று’. இந்தியாவில் முதல் பட்ஜெட் விமான பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார். இந்நிலையில் சூரரைப் போற்று படத்தை இந்தியில் ரீமேக் செய்வது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் நவம்பர் மாதம் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்த இந்த திரைப்படத்தை பல்வேறு திரையுலக பிரபலங்களும் பார்த்து பாராட்டினார்கள். சூர்யாவின் கம்பேக் திரைப்படமாக அவரின் ரசிகர்களால் இந்தப்படம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சூரரைப் போற்று படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் இந்த படத்தின் இந்தி உரிமைகள் குறித்து சிக்யா எண்டர்டெய்ன்மென்ட் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 2D எண்டர்டெய்ன்மென்ட் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் அளித்துள்ள விளக்கத்தில், கேப்டன் கோபிநாத் அவர்களிடம் இருந்து படத்துக்கான உரிமையை பெற்று தந்ததற்கு உண்டான பணத்தை சிக்யா எண்டர்டெய்ன்மென்டிற்க்கு பேசியபடி வழங்கிவிட்டோம். மேலும், கோபிநாத் அவர்களுக்கு தந்த பணத்தை தவிர, சிக்யா எண்டர்டெய்ன்மென்டிற்க்கு ரூ 3 கோடி வழங்கப்பட்டுள்ளது.

ஓடிடியில் வெளியாகும் சந்தானத்தின் ‘டிக்கிலோனா’: விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
எந்த ஒரு அடிப்படையும் இன்றி பட வேலைகளை தாமதப்படுத்தவும், அதிகமாக பணம் பெறும் நோக்கத்துடனும் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர். எங்கள் தரப்பின் நியாயங்களை நிரூபிக்க தேவையான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. ஆகையால் சிக்யா எண்டர்டெய்ன்மென்ட் தொடர்ந்த இந்த வழக்க்கில் எந்த ஒரு முகாந்திரமும் இல்லை, என்று தெரிவித்துள்ளார்.

சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் அபண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து ‘சூரரைப் போற்று’ படத்தின் இந்தி ரீமேக்கை உருவாக்க உள்ளனர். தமிழில் இந்தப்படத்தை இயக்கிய சுதா கொங்கரோவே இந்தியிலும் இயக்க உள்ளார். படத்தில் பணியாற்ற உள்ள மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.