மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்‘ படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் துவங்கியது. இந்நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை காரைக்குடியில் துவங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விக்ரம் படத்தை கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி இணையத்தில் வைரலானது. அதனை தொடந்து இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஜூலை 16-ம் தேதி துவங்கியது. முதல்நாள் படப்பிடிப்பில் கமல், விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை காரைக்குடியில் நடத்த திட்டமிட்டுள்ளனர். சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பும் காரைக்குடியில் நடைபெற்று வருகிறது. மேலும் சூர்யா படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் பகுதிகளையே விக்ரம் படத்திற்காக லோகேஷ் கனகராஜ் தேர்வு செய்து வைத்துள்ளாராம் .

ஆர்.ஜே.பாலாஜி – அபர்ணா பாலமுரளி இணையும் ‘பதாய் ஹோ’ தமிழ் ரீமேக்: விரைவில் படப்பிடிப்பு!
கொரோனா இரண்டாம் அலை கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால ஒரே நேரத்தில் ஒரே பகுதியில் இரண்டு பெரிய நடிகர்களின் படப்பிடிப்புக்கு அனுமதி தர முடியாது என அதிகாரிகள் சொல்லிவிட்டார்களாம். இதனால் சூர்யா படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னரே விக்ரம் படப்பிடிப்பு துவங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பும் காரைக்குடியில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் எதற்கும் துணிந்தவன் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ், திவ்யா, வினய், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.