ஹைலைட்ஸ்:

  • சந்தானத்தை திட்டும் நெட்டிசன்ஸ்
  • ஜெய்பீம் சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்த சந்தானம்

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்திவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சூர்யாவை எட்டி உதைத்தால் ரூ. 1 லட்சம் பரிசு என்று பாமக மாவட்ட செயலாளர் அறிவிப்பு வெளியிட்டார்.

மிரட்டல் எதிரொலி: சூர்யா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு

சூர்யாவுக்கு தொடர்ந்து மிரட்டல் வந்து கொண்டிருப்பதால் தி. நகரில் இருக்கும் அவரின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சூர்யாவுக்கு ஆதரவாக திரையுலகினர் குரல் கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஜெய்பீம் சர்ச்சை குறித்து சந்தானமும் பேசியிருக்கிறார். யாரையும் உயர்த்தி பேசலாம், ஆனால் அடுத்தவர்களை தாழ்த்தி பேசக் கூடாது. அது தேவையில்லாத விஷயம். அடுத்தவங்களை புண்படுத்துற மாதிரி பேசக் கூடாது என அவர் தெரிவித்தார்.

சந்தானம் கூறியதை அடுத்து சமூக வலைதளங்களில் அவரை விளாசுகிறார்கள். இதனால் #சாதிவெறி_சந்தானம் என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது.

சமூக வலைதளவாசிகள் கூறியிருப்பதாவது,
சூர்யாவை பற்றி பேச உங்களுக்கு தகுதி இல்லை. காமெடி செய்கிறேன் என்கிற பெயரில் அடுத்தவர்களை தாழ்த்தி, கேவலமாக பேசுவதை வழக்கமாக வைத்திருப்பவர்கள் நீங்கள்.
இந்நிலையில் திடீர் என்று இப்படி பேசுவது சரியில்லை. முதலில் நீங்கள் மாறுங்கள் என தெரிவித்துள்ளனர்.
சந்தானம் நடித்திருக்கும் சபாபதி படம் நாளை மறுநாள் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் சந்தானம் இப்படி பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.